நகராட்சி இடைத்தேர்தலில் போட்டியிட முன் வந்தது ஏன்?

Added : ஆக 29, 2021
Share
Advertisement
தங்கவயல்:''வார்டு மக்கள் காட்டிய பரிவு, என்னை சமூக அக்கறையில் ஈடுபட வைத்துள்ளது. தாயை இழந்த வருத்தத்தில் இருந்த போது பலரும் அளித்த ஆறுதல் தான் என் பலம். ம.ஜ.த.,விலிருந்து விலகி காங்கிரசில் போட்டியிடுகிறேன்,'' என, தங்கவயல் நகராட்சி 12வது வார்டு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் மோனிஷா தெரிவித்தார்.தங்கவயல் நகராட்சி 12வது வார்டு இடைத்தேர்தலில்
 நகராட்சி இடைத்தேர்தலில் போட்டியிட முன் வந்தது ஏன்?

தங்கவயல்:''வார்டு மக்கள் காட்டிய பரிவு, என்னை சமூக அக்கறையில் ஈடுபட வைத்துள்ளது. தாயை இழந்த வருத்தத்தில் இருந்த போது பலரும் அளித்த ஆறுதல் தான் என் பலம். ம.ஜ.த.,விலிருந்து விலகி காங்கிரசில் போட்டியிடுகிறேன்,'' என, தங்கவயல் நகராட்சி 12வது வார்டு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் மோனிஷா தெரிவித்தார்.

தங்கவயல் நகராட்சி 12வது வார்டு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக மோனிஷா, 22, போட்டியிடும் இவர், பி.இ., பட்டதாரி. அரசியலுக்கு புதுமுகம்.

நமது நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:

பட்டதாரியான நீங்கள், நகராட்சி இடைத்தேர்தலில் போட்டியிட முன் வந்தது ஏன்?

படிப்பு, வீடு, குடும்பம் என்று தான் இருந்தேன். நகராட்சி உறுப்பினராக இருந்த, என் தாய் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அப்போது, 12-வது வார்டு மக்கள் அனைவருமே எனக்கு தாயாக வந்து, கண்ணீரை துடைத்தனர். பக்கபலமாக இருப்போம் என்று உறுதி கூறினர். இதனால், இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்தேன்.

வெற்றி பெற்று என்ன செய்ய போகிறீர்கள்?

அடிப்படை வசதிகளில் தண்ணீர் பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளது. தெருவிளக்குகள் பிரச்னை இல்லை. சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளவும், கொசுத்தொல்லையை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். கிருமி நாசினி தெளிக்கப்படும். நகராட்சி மூலம் கிடைக்கும் அனைத்து சலுகைகளையும் பெற்று தருவேன்.

நீங்கள் வெற்றிப்பெற்றால், 'ஜெராக்ஸ்' களின் ஆதிக்கம் இருக்குமா?

நான் ஒரு பெண். சமூக அக்கறையுடன் செயல்படுவேன். நகராட்சி கூட்டங்களில் நான் தான் பேச முடியும். இதுக்கு, 'ஜெராக்ஸ்' தேவைப்படாது. நகராட்சி, மாநில, மத்திய, அரசுகளின் உதவிகளை பெற்று, வார்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.

கட்சி மாறியது ஏன்?

கடந்த தேர்தலில் ம.ஜ.த.,வில் உங்கள் தாய் ஜெயந்தி வெற்றி பெற்றார். ஆனால் நீங்கள் காங்கிரசில் போட்டியிடுவது சாதகமாக இருக்குமா?என் தந்தை ரமேஷ், மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ., பக்தவச்சலத்தின் நம்பிக்கைக்குரிய விசுவாசி. அவரை பின்பற்றி அரசியலில் இருந்தார். அவரது மறைவுக்குப் பின், ம.ஜ.த., செயல்பாடு தொய்வானது.தொகுதியும், நகராட்சியும் காங்கிரஸ் வசமாக உள்ளது. எனவே காங்., வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிப் பெற்றால், மக்கள் நல தேவைகளை நிறைவேற்றலாம் என கருதி போட்டியிடுகிறேன்.

ம.ஜ.த.,வுக்கு துரோகம் செய்து விட்டீர்கள் என நினைக்க மாட்டார்களா?

எங்களுக்கு எல்லாமே பக்தவச்சலம் தான். அவர் காலமானதும், தங்கவயலில் ம.ஜ.த., என்ற பேச்சுக்கே இடமில்லை. காங்கிரசில் விசுவாசமாக செயல்படுவோம்.

எவ்வளவு செலவு?தேர்தலில் எவ்வளவு செலவு செய்வீர்கள்?

மக்கள் மனதில் நாங்கள் இருக்கிறோம். அதுதான் எங்களது செல்வம். அதுவே செல்வாக்கு. தேர்தல் விதிமுறைக்கு உட்பட்டு செலவு செய்வேன்.இத்தேர்தலில் உங்களுக்கு நேரடியான போட்டியாளர் யார்.இத்தேர்தலில் ஆறு பேர் போட்டியில் உள்ளனர். அவரவர் வெற்றிக்கு அவரவர் பிரசாரத்தில் உள்ளனர். 5 பேருமே போட்டியாளர்கள்.

ஓட்டுரிமை:தேர்தல் நடக்கும் இந்த வார்டில் உங்களுக்கு ஓட்டு உள்ளதா?

வெளி வார்டில் இருந்து வந்து போட்டியிடவில்லை. இதே வார்டின் வாக்காளர் தான்.நகராட்சி உறுப்பினராக இருந்தஉங்கள் தாய் என்ன செய்தார்.தேவையான அளவுக்கு தண்ணீர் வசதியை செய்து கொடுத்தார். கொரோனா காலத்தில் இறந்தோர் அடக்கத்துக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்பட்டது. முதியோர், விதவை பென்ஷன் நிலுவை இல்லாமல் கிடைக்க செய்தார்.

திருமண விழாவுக்கு விதிமுறைக்கு உட்பட்டு அனுமதி பெற்று தந்தார். ஆதார் கார்டில் திருத்தம், ரேஷன் கார்டுகள், தெரு விளக்கு, போர்வெல் ஏற்படுத்தப்பட்டது. பொதுக் கழிப்பறை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

உங்கள் கடமை என்ன?

நகராட்சி மூலம், மாநில அரசு மூலம் கிடைக்கும் சலுகைகள் அனைத்தும் 12 வது வார்டுக்கு கிடைக்க செய்வேன். மக்களின் தேவைகளை நிறைவேற்றுவேன்.இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது அவ்வப்போது, தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா பெயரையும், சில முறை நகராட்சி தலைவர் முனிசாமி பெயரையும் சுட்டி காண்பித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X