பொது செய்தி

இந்தியா

30_DMR_22 / செக் போஸ்ட்

Added : ஆக 29, 2021
Share
Advertisement
பறக்கும் படை என்னாச்சு?ஓட்டுக்கு ரேட் கூட்டப்போறாங்களாம். ஒரு ஓட்டுக்கு 500 என்பதை 1,000 ஆக்க, ஒரு தரப்பில் பேசிக்கிட்டாங்க.அவங்க என்ன, 1,000 தருவது; நாங்க 2,000க்கு ரெடியென கூவத் தொடங்கிட்டாங்க. எல்லாம், பேச்சு பேச்சா தான் இருக்கு. யாருமே எதையும் கொடுத்த பாடில்லன்னு ஓட்டுப்போட இருப்பவங்க சிலரு சொல்றாங்க.ஓட்டு சேகரிக்க வருகிறவர்களுக்கு பிரியாணி, குவார்ட்டர், கையில் காசு

பறக்கும் படை என்னாச்சு?

ஓட்டுக்கு ரேட் கூட்டப்போறாங்களாம். ஒரு ஓட்டுக்கு 500 என்பதை 1,000 ஆக்க, ஒரு தரப்பில் பேசிக்கிட்டாங்க.அவங்க என்ன, 1,000 தருவது; நாங்க 2,000க்கு ரெடியென கூவத் தொடங்கிட்டாங்க. எல்லாம், பேச்சு பேச்சா தான் இருக்கு. யாருமே எதையும் கொடுத்த பாடில்லன்னு ஓட்டுப்போட இருப்பவங்க சிலரு சொல்றாங்க.

ஓட்டு சேகரிக்க வருகிறவர்களுக்கு பிரியாணி, குவார்ட்டர், கையில் காசு கிடைக்குதாம். ஆனால் ஓட்டுப் போட இருப்பவங்களுக்கு எப்போ இதெல்லாம் கிடைக்கும்னு தெரியலையாம்.

பணம், பரிசு பொருள் தருவதை தடுக்க தேர்தல் அதிகாரிகள் கண்காணிச்சு வர்ராங்க; பறக்கும் படையும் சுழலுது; இருந்த போதிலும் யாரும் கண்டுக்கல.பட்டுவாடா விவகாரத்தில் எங்கும் ஒருத்தரும் இதுவரைக்கும் 'பறக்கும் படை'யிடம் சிக்கலயாம்.

கால்வாய் இல்லாத கிராமம்!

கால்வாய் இல்லாமல் கிருஷ்ணாபுரம் கிராமம் இருக்கு. கிராம பஞ்சாயத்துக்காரங்க இதுவரை கவனிக்கவே இல்லை. 15 வருஷமா கால்வாய் வசதி கேட்டு வராங்க. ஆனால், கோரிக்கைகளை யாரும் கண்டுகொள்ளவே இல்லை.கிராம டெவலப்மென்டுக்கு லட்சம், லட்சமா செலவு செய்றதா சொல்றாங்க. அதோட லட்சணத்தை கிருஷ்ணாபுரத்து கிராமத்துக்கு வந்து பார்க்கனும்னு அவங்க அழைக்குறாங்க.சுற்றுப்புறம் சுத்தமாக இருக்கனும்னு சொல்றாங்க, ஆனா, சாக்கடை, கழிவு நீர் வெளியேற கால்வாய் வேண்டாமன்னு கேட்கிறாங்க.

சீர்கேட்டுக்கு சாட்சி!

கோல்டன் சிட்டி முனிசி.,யில, நகர டெவலப்மெண்ட்டுக்கு கோடியில் திட்டம் போடுறாங்க; செலவழிக்கிறதா கணக்கும் காட்டுறாங்க.நகரின் 'ஹார்ட் ஆப் தி சிட்டி' யில் இருப்பது கீதா சாலை. இதன் 1, 3, 6 வது கிராசில் இருக்கிற கால்வாய்களில் சாக்கடை, கழிவுநீர் தேங்கி சாலைகளில் பாய்கிறது.இதனை சரிப்படுத்த கால்வாய் திட்டம் ஏற்படுத்தலையே. நகரத்தை நாறடிக்க விடலாமா. இதுக்கு அரசு பணம் செலவழிச்சா குறைஞ்சிடுமா.

பிரசித்தி பெற்ற கோவில்கள் இருக்கிற இச்சாலையில் நடந்து செல்வோர், சாக்கடை சகதிகளை மிதித்து செல்லணுமா; சீர்படுத்த பொறுப்பானவங்க எதுக்கு தயங்குறாங்கன்னு வர்த்தகர்கள் சங்கடப்படுறாங்க.நகரை சீரழிக்கவா திட்டம்!மழை பெய்வதால் ஏற்படுகிற சேறு சகதியில் புரளுவதற்கு, பன்றிகளுக்கு வேண்டுமானால் கொண்டாட்டமா இருக்கலாம்.

ஆனால், ஆரோக்கியமா வாழ விரும்புகிற மனிதர்களுக்கு சேறு, சாக்கடைக் கழிவு தேவையா.கன மழைக்கு பயிரெல்லாம் நாசமாச்சு. அம்ருத் சிட்டி திட்டத்துக்கு வெட்டிய பள்ளங்களால் தெருவெல்லாம் சேறு, சாக்கடையாக பாழாய் போச்சு. நடமாட முடியாமல் தவிக்க வேண்டியதாயிடுச்சு.இதுக்கு தானா, 165 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கினாங்க. அம்ருத் சிட்டி திட்டத்தை ஏற்படுத்தினாங்க. இது தான் கிரிமினல் வேஸ்ட்டோ.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X