அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு ...ஓரிரு நாளில்! நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் சூசகம்

Updated : ஆக 30, 2021 | Added : ஆக 29, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
தமிழகத்தில், ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளில், மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில், 'ஓரிரு நாட்களில் தேர்தல் தேதி முடிவு செய்யப்பட்டு, அறிவிப்பு வெளியிடப்படும்' என, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு, சூசகமாக தெரிவித்துள்ளார்.தமிழகத்தில், 2016ம் ஆண்டு உள்ளாட்சி நிர்வாகிகளின் பதவிக்காலம்
ஓரிரு நாளில்,உள்ளாட்சி ,தேர்தல் தேதி ,அறிவிப்பு,

தமிழகத்தில், ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளில், மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில், 'ஓரிரு நாட்களில் தேர்தல் தேதி முடிவு செய்யப்பட்டு, அறிவிப்பு வெளியிடப்படும்' என, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு, சூசகமாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், 2016ம் ஆண்டு உள்ளாட்சி நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிந்தது. ஆனால், தேர்தலை நடத்த, முந்தைய அ.தி.மு.க., அரசு ஆர்வம் காட்டவில்லை. வார்டு வரையறை பணிகள் முடியாதது, இதற்கு காரணமாக கூறப்பட்டு வந்தது. தொடர் வழக்குகள் காரணமாக, தேர்தலை நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு ஏற்பட்டது.


ஒன்பது மாவட்டங்கள்

இதையடுத்து, 2019ம் ஆண்டு இறுதியில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு மட்டும், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.

சென்னை நீங்கலாக, மீதமுள்ள மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், 2020 ஜனவரியில் பொறுப்பேற்றனர். இதைத் தொடர்ந்து, மாவட்ட தலைவர், துணை தலைவர், ஒன்றிய தலைவர், ஊராட்சி துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு, மறைமுக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.


உயர் நீதிமன்றம் கெடு

தேர்தல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வரும் செப்., 15க்கு முன், தேர்தலை நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, தேர்தல் முன்னேற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் துவங்கியது. முதற்கட்டமாக, ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.இம்மாவட்டங்களில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெற்றுஉள்ளது.
தி.மு.க., அரசு பொறுப்பேற்ற 100 நாட்களில், பெண்களுக்கு இலவச பஸ் பயணம், கொரோனா நிவாரணம் 4,000 ரூபாய், 14 வகையான மளிகை தொகுப்புகள், பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு என, பல தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளன.தேர்தலில் பெற்ற மனுக்கள் அடிப்படையில், உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்திலும், பலரது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.


தி.மு.க., ஆர்வம்

தி.மு.க., சிறப்பாக ஆட்சி செய்வதாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோரும், சட்டசபையில் வெளிப்படையாக பாராட்ட துவங்கியுள்ளனர். அ.தி.மு.க., கூட்டணியில் இருந்த பா.ம.க.,வும், அரசை பாராட்டுவது மட்டுமின்றி, தி.மு.க., கூட்டணியில் ஐக்கியமாகவும் காய் நகர்த்த துவங்கிஉள்ளது.எனவே, அனைத்து தரப்பிலும் சாதகமான சூழல் நிலவுவதால், தேர்தலை விரைந்து முடிக்க தி.மு.க.,வினர் விரும்புகின்றனர். தற்போது சட்டசபையில், துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. இதை, செப்., 13 வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

உள்ளாட்சி தேர்தலை விரைந்து முடிக்க அரசு திட்டமிட்டுள்ளதால், மானியக் கோரிக்கை விவாதம் விரைவில் முடியும் வகையில், மாற்றம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதனிடையே, தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில தேர்தல் ஆணையம் முடித்துள்ளது. எப்போது வேண்டுமானாலும், ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்துவது குறித்த அறிவிப்பு வெளியாகலாம்.

இந்த மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தலுடன், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தி, மற்ற மாவட்டங்களில் 'பல்ஸ்' பார்க்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.


ஓரிரு நாளில் முடிவு

இந்நிலையில், தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்து, முதல்வரே ஓரிரு நாளில் முடிவு செய்வார் என, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு தெரிவித்தார்.

திருச்சியில் நேற்று, பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்து அவர் கூறியதாவது: தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணை தயாரிக்க, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இட ஒதுக்கீடு சுழற்சி முறையை அறிவித்து, 100 நாட்கள் கால அவகாசம் கொடுக்க வேண்டும். அதன்பின், மேலும் 30 நாட்கள் கால அவகாசம் கொடுக்க வேண்டும்.

இதையெல்லாம் கணக்கில் கொண்டு, எந்த தேதியில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என, நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலர் மற்றும் அதிகாரிகள் ஆலோசித்து, அதற்கான பணியை துவக்கி உள்ளனர். இது தொடர்பான அறிக்கையை, ஓரிரு நாளில் முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பர். அதன்பின், எந்த தேதியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று முதல்வரே அறிவிப்பார்.இவ்வாறு நேரு கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
31-ஆக-202100:08:01 IST Report Abuse
Pugazh V என்ன உபகாரத்துக்கு என்ன பரிகாரம் செய்ய காத்து கொண்டிருப்பதாக எழுதுகிறார்??
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
30-ஆக-202119:45:32 IST Report Abuse
Narayanan Where they got money to contact this election? so they (present government) unnecessarily putting blame on previous government for financial crises. From announcing their plans FREE , Memorial for karunanithi, now the local body election all we find there is no financial crises. prople of tamilnadu must know this.
Rate this:
Cancel
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
30-ஆக-202117:58:04 IST Report Abuse
Sriram V Third wave courtesy DMK
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X