பொது செய்தி

தமிழ்நாடு

ஜூலை மாத தீர்மானங்கள்: பதிவேற்றத்துக்கு 'வெயிட்டிங்'

Added : ஆக 29, 2021
Share
Advertisement
கோவை:கோவை மாநகராட்சி இணைய தளத்துடன், மென் பொருள் இணைக்கும் பணி நடந்ததால், ஜூலைமாதம் நடந்த மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்கள், இன்னும் பொது மக்கள் பார்வைக்கு வெளியிடப்படாமல் இருக்கிறது.கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், கோவை மாநகராட்சியில் நிறைவேற்றிய தீர்மானங்கள், இணைய தளத்தில் வெளியிடாமல் மூடி மறைக்கப்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்தது. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும்,

கோவை:கோவை மாநகராட்சி இணைய தளத்துடன், மென் பொருள் இணைக்கும் பணி நடந்ததால், ஜூலைமாதம் நடந்த மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்கள், இன்னும் பொது மக்கள் பார்வைக்கு வெளியிடப்படாமல் இருக்கிறது.

கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், கோவை மாநகராட்சியில் நிறைவேற்றிய தீர்மானங்கள், இணைய தளத்தில் வெளியிடாமல் மூடி மறைக்கப்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்தது. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அத்தீர்மானங்கள் பதிவேற்றம்செய்யப்பட்டன. அதில், பல்வேறு ஊழல்கள், முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்தன.

தி.மு.க., ஆட்சியில், ஜூன், 30ம் தேதி மாலை, 4:00 மணிக்கு முதல் மாமன்ற கூட்டம் நடந்தது; அனைத்து துறை தலைவர்களும் பங்கேற்றனர். 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டம் நிறைவடைந்த, ஒரு மணி நேரத்தில் இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.இதேபோல், ஜூலை, 30ல் மாமன்ற கூட்டம் நடந்தது; நேற்று வரை, அதில் நிறைவேற்றிய தீர்மானங்கள் பதிவேற்றப்படவில்லை.

இதுதொடர்பாக விசாரித்தபோது, 'யு.டி.ஐ.எஸ்., என்கிற மென்பொருளை, மாநகராட்சி பயன்படுத்த துவங்கியிருக்கிறது. அதற்கான பணி நடந்ததால், இணையதளம் வாயிலாக மற்ற சேவைகள் வழங்க முடியவில்லை. சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, வாடகை இனங்கள் வசூலிக்கும் பணி இப்போது துவங்கியிருக்கிறது. விரைவில் தீர்மானங்கள் பதிவேற்றப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X