சில வரி செய்திகள்

Added : ஆக 29, 2021
Share
Advertisement
போதை நடிகர் கைதுமும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையில் வசிக்கும் பாலிவுட் நடிகர் அர்மான் கோஹ்லி வீட்டில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர். இதில் 'கோஹைன்' என்ற போதைப்பொருள் சிக்கியது. இதையடுத்து, போதைப்பொருள் வழக்கில் அர்மான் கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் வியாபாரி ஒருவரும் கைது செய்யப்பட்டார். காங்., தலைவர்கள் 'சஸ்பெண்ட்'திருவனந்தபுரம்: கேரளாவில் காங்கிரஸ்

போதை நடிகர் கைது

மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையில் வசிக்கும் பாலிவுட் நடிகர் அர்மான் கோஹ்லி வீட்டில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர். இதில் 'கோஹைன்' என்ற போதைப்பொருள் சிக்கியது. இதையடுத்து, போதைப்பொருள் வழக்கில் அர்மான் கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் வியாபாரி ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

காங்., தலைவர்கள் 'சஸ்பெண்ட்'

திருவனந்தபுரம்: கேரளாவில் காங்கிரஸ் நிர்வாகிகளின் மறுசீரமைப்பு பணிகள் நடக்கின்றன. இதன்படி 14 மாவட்டங்களுக்கும் அகில இந்திய காங்., கமிட்டி சார்பில் புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். இதற்கு, கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., சிவதாசன் நாயர், முன்னாள் மாநில பொதுச் செயலர் அனில்குமார் போன்றோர் 'டிவி' நிகழ்ச்சியில் அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்து, இருவரையும் கட்சியில் இருந்து 'சஸ்பெண்ட்' செய்துள்ளதாக, மாநில தலைவர் சுதாகரன் அறிவித்துள்ளார்.

கடத்தல் தங்கம் பறிமுதல்

மங்களூரு: கேரளாவின் காசர்கோடு நகரைச் சேர்ந்த முகமது நவாஸ் என்பவர், துபாயில் இருந்து கர்நாடகாவின் மங்களூரு விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் வந்தார். அவரிடம் இருந்த 'ஸ்கேட்டிங் போர்டு'களின் 'போல்ட்' மற்றும் சக்கரத்தை இணைக்கும் கம்பிகளில் தங்கம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து 16.21 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 335 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது; விசாரணை தொடர்கிறது.

அரசு நிதி பெற மோசடி

சிந்த்வாரா: மத்திய பிரதேசத்தில் பலியான கட்டுமான தொழிலாளர் குடும்பத்தினருக்கு, அரசு தரப்பில் 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். இதனை பயன்படுத்தி சிந்த்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த 23 பேரின் குடும்பத்தினர், போலி இறப்பு சான்றிதழ் தாக்கல் செய்து இழப்பீடு பெற்றுள்ளனர். இந்த மோசடி குறித்து விசாரிக்கவும், தவறு செய்தோர் மீது வழக்கு பதிவு செய்யவும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ரூ.14 கோடி போதைப்பொருள் பறிமுதல்

கவுஹாத்தி: வடகிழக்கு மாநிலமான அசாம் தலைநகர் கவுஹாத்தியில், போலீசார் நேற்று முன்தினம் நடத்திய சோதனையில் இரு இடங்களில் போதைப்பொருளான 'ஹெராயின்' சிக்கியது. பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயினின் சர்வதேச மதிப்பு 14 கோடி ரூபாய் என தெரிகிறது. போதைப்பொருள் கடத்திய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.

தாய்லாந்து நாட்டினர் விடுவிப்பு

பரேலி: உத்தர பிரதேசத்தின் ஷாஜகான்பூர் மசூதியில், கடந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி கூட்டம் நடத்தப்பட்டது. இது தொடர்பாக, தப்லிக் - இ - ஜமாத் உறுப்பினர்களான தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒன்பது பேர், இரு தமிழர்கள் உட்பட 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்கான ஆதாரம் இல்லை என 12 பேரையும் பரேலி நீதிமன்றம் விடுவித்தது.

ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை

புதுடில்லி: டில்லியில் சமீபத்தில் 9 வயது சிறுமி, பூஜாரி உட்பட நால்வரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின், சிறுமியை கொலை செய்து உடலை தகனம் செய்தனர். இது தொடர்பாக விசாரித்த போலீசார், நால்வரையும் கைது செய்தனர். விசாரணையை ஒரு மாதத்திற்குள் முடித்த போலீசார், நால்வர் மீதும் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X