தமிழ்நாடு

கோவைக்கு தடுப்பூசி தாராளம்: திகட்ட... திகட்ட! முகாம்கள் எண்ணிக்கை ஏராளம்

Updated : ஆக 30, 2021 | Added : ஆக 29, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை:தடுப்பூசி கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததெல்லாம் பழைய கதை. இப்போது கோவைக்கு தடுப்பூசி வாரி வழங்கப்படுகிறது. மாவட்டத்துக்கு, 1.42 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை, நேற்று தமிழக அரசு வழங்கியதை தொடர்ந்து, முகாம்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.கொரோனா இரண்டாம் அலையில், அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டம் என்பதால், தடுப்பூசி ஒதுக்கீடு கோவைக்கு அதிகமாக இருக்கும்
கோவைக்கு தடுப்பூசி தாராளம்: திகட்ட... திகட்ட! முகாம்கள் எண்ணிக்கை ஏராளம்

கோவை:தடுப்பூசி கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததெல்லாம் பழைய கதை. இப்போது கோவைக்கு தடுப்பூசி வாரி வழங்கப்படுகிறது. மாவட்டத்துக்கு, 1.42 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை, நேற்று தமிழக அரசு வழங்கியதை தொடர்ந்து, முகாம்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலையில், அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டம் என்பதால், தடுப்பூசி ஒதுக்கீடு கோவைக்கு அதிகமாக இருக்கும் என்று, அரசு முதன்மை செயலாளர் சித்திக் அறிவித்திருந்தார்.அதற்கேற்ப, சில நாட்களாக கோவை மாவட்டத்துக்கு கூடுதல் டோஸ் தடுப்பூசி ஒதுக்கப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில், 1 லட்சத்து 42 ஆயிரத்து 940 டோஸ், கோவை மாவட்டத்துக்கு வந்து சேர்ந்தது.

இதில், கோவிஷீல்டு 1,23,500 டோஸ்; கோவாக்சின் 19,440 டோஸ் ஆகும். இவற்றில் நேற்றைய முகாமுக்கு, 68,700 டோஸ் கோவிஷீல்டு, 8350 டோஸ் கோவாக்சின் ஆகியவை பயன்படுத்தப்பட்டன.மீதமுள்ள, 65890 டோஸ் தடுப்பூசி, இன்றைய முகாம்களுக்கு பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று அதிக தடுப்பூசி வந்ததை தொடர்ந்து, 24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையங்களுக்கும், தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டது.கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ., மருத்துவமனை ஆகியவற்றுடன் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், மதுக்கரை, அன்னுார், பெரியநாயக்கன்பாளையம், வால்பாறை, சூலுார், கிணத்துக்கடவு, தொண்டாமுத்துார், வேட்டைக்காரன்புதுார், கோட்டூர், சுண்டக்காமுத்துார், கோலார்பட்டி அரசு மருத்துவமனைகளும், 24 மணி நேர தடுப்பூசி மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த மையங்களில் பொதுமக்களுக்கு இலவசமாக கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று நடந்தது. இது மட்டுமின்றி, நேற்று மாவட்டத்தின் ஊரகப்பகுதிகளில் 37 தடுப்பூசி முகாம்களும், மாநகரில் 33 முகாம்களும் நடத்தப்பட்டன.'பல்க் புக்கிங்'கும் உண்டு!தடுப்பூசிகளை 'பல்க் புக்கிங்' செய்து வாங்க விரும்புவோர், முன்பதிவு செய்யலாம் என்று, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.செப்.,1 முதல் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட இருப்பதால், கொரோனா தடுப்பூசி போடும் பணி, மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளுக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள, வாய்ப்பு இல்லாதவர்களுக்கு உதவும் வகையில், 'பல்க் புக்கிங்' நடைமுறையை, மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது.அதன்படி குடியிருப்போர் நல சங்கங்கள், கல்லுாரிகள், முதியோர் இல்லங்கள், தொழில் நிறுவனங்கள், தங்களது விபரங்களை தெரிவித்து, தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யலாம்.
குறைந்தபட்சம் 100 பேருக்காவது, முன்பதிவு செய்ய வேண்டும். தடுப்பூசி போடுவோர், 18 வயதுக்கு மேற்பட்டோராக இருக்க வேண்டும்.முகாம் நடத்த ஏற்ற இடம், தேதி போன்ற விபரங்களையும் குறிப்பிட்டு, விண்ணப்பிக்க வேண்டும் என்று, மாவட்ட கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார். விண்ணப்ப படிவம் சமூக வலைதளங்களில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-ஆக-202116:20:07 IST Report Abuse
Ram Pollachi கோவைக்கு தடுப்பூசி தாராளம் அதை போட்டு கிட்டவங்க ஏராளம். ஊசியை போட்டால் இரண்டு நாளைக்கு சரக்கு, பீடி, புகையிலை, அசைவம் எடுத்துக்க கூடாது என்று சொல்கிறார்கள் அதை நினைத்து ஜனங்கள் ஊசி போடமாட்டேங்குது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X