அரசியல் செய்தி

தமிழ்நாடு

பெண்கள் முன்னேற்றத்திற்கு பாடுபடுவோம்: ஸ்டாலின்

Updated : ஆக 31, 2021 | Added : ஆக 29, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
கொளத்துார்: ''பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவோம்,'' என கொளத்துாரில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.தமிழக முதல்வர் ஸ்டாலின் , கொளத்துார் தொகுதியில் பல்வேறு திட்டப் பணிகளை துவக்கி வைத்து பேசியதாவது:பெண்களுடைய திட்டங்களுக்கும், சாதனைகளுக்கும் இப்போது ஆட்சிக்கு வந்த போது மட்டுமல்ல, இதற்கு முன்பும் தி.மு.க., ஆட்சியின் சார்பில் பல திட்டங்களை எல்லாம் தேடி
 பெண்கள், முன்னேற்றத்திற்கு, பாடுபடுவோம், ஸ்டாலின்

கொளத்துார்: ''பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவோம்,'' என கொளத்துாரில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் , கொளத்துார் தொகுதியில் பல்வேறு திட்டப் பணிகளை துவக்கி வைத்து பேசியதாவது:பெண்களுடைய திட்டங்களுக்கும், சாதனைகளுக்கும் இப்போது ஆட்சிக்கு வந்த போது மட்டுமல்ல, இதற்கு முன்பும் தி.மு.க., ஆட்சியின் சார்பில் பல திட்டங்களை எல்லாம் தேடி நிறைவேற்றியுள்ளோம்.பெண்களுடைய முன்னேற்றம் தான் இந்த நாட்டின் முன்னேற்றம்.சொத்தில் பெண்களுக்கு சம உரிமை, வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீத இட ஒதுக்கீடு, கர்ப்பிணி பெண்களுக்கு உதவி தொகை, விதவைகளுக்கு மறுவாழ்வு திட்டம் என, இந்த திட்டங்களுக்கு எல்லாம் நிதி வழங்கப்பட்ட ஆட்சி தி.மு.க., ஆட்சி.

பெண்கள் அனைவரும் யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கோடு 1989ம் ஆண்டு, கருணாநிதி முதல்வராக இருந்தபோது, தர்மபுரியில் மகளிர் சுய உதவிக்குழு என்ற ஓர் அற்புதமான திட்டத்தை தொடங்கி வைத்தார்.தேர்தல் நேரத்தில் பல உறுதி மொழிகளை நாங்கள் கூறியுள்ளோம். அதில் எதையெல்லாம் நிறைவேற்றியுள்ளோம்.எதையெல்லாம் நிறைவேற்றப் போகிறோம் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.

பெண்கள் பேருந்தில் பயணம் செய்யும் போது இலவசமாக பயணம் செய்யலாம் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளோம்.பெண்களின் முன்னேற்றத்திற்காக நிச்சயமாக உறுதியாக இந்த ஆட்சி பணியாற்றும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
31-ஆக-202110:59:43 IST Report Abuse
Thiagarajan Kodandaraman அப்படி என்றால் உங்கள் கட்சியில் உள்ளவரையே பெண் முதல்வர் பதவியில் வைத்து பெண்களிடம் நல்ல மதிப்பு வாங்கலாமே
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
30-ஆக-202117:46:32 IST Report Abuse
Mohan அத முன்னேத்திதான் ரெயிடு வரைக்கும் போயிடுச்ச.
Rate this:
Cancel
GANESUN - Delhi,இந்தியா
30-ஆக-202117:30:58 IST Report Abuse
GANESUN 7 வருஷம்னு ஒரு புலம்பல் வருமே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X