ஒளிரும் ஆசிரியர் விருது விழாவில் சங்கமித்த தினமலர் லட்சிய ஆசிரியர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'ஒளிரும் ஆசிரியர்' விருது விழாவில் சங்கமித்த 'தினமலர் லட்சிய ஆசிரியர்கள்'

Added : ஆக 29, 2021
Share
காரைக்குடி : காரைக்குடி ஓவியம் லயன்ஸ் சங்கம் சார்பில், தினமலர் லட்சிய ஆசிரியர்களுக்கு ஒளிரும் ஆசிரியர் விருது வழங்கும் விழா காரைக் குடியில் நடந்தது. காரைக்குடி நேஷ னல் கேட்டரிங் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, காரைக்குடி ஓவியம் லயன்ஸ் சங்க தலைவர் பாண்டி செல்வம் தலைமையேற்றார். அழகப்பா பல்கலை., முன்னாள் துணைவேந்தர் சுப்பையா, அழகப்பா அரசு கலைக்கல்லுாரி முன்னாள்
 'ஒளிரும் ஆசிரியர்' விருது விழாவில் சங்கமித்த 'தினமலர் லட்சிய ஆசிரியர்கள்'

காரைக்குடி : காரைக்குடி ஓவியம் லயன்ஸ் சங்கம் சார்பில், தினமலர் லட்சிய ஆசிரியர்களுக்கு ஒளிரும் ஆசிரியர் விருது வழங்கும் விழா காரைக் குடியில் நடந்தது.

காரைக்குடி நேஷ னல் கேட்டரிங் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, காரைக்குடி ஓவியம் லயன்ஸ் சங்க தலைவர் பாண்டி செல்வம் தலைமையேற்றார். அழகப்பா பல்கலை., முன்னாள் துணைவேந்தர் சுப்பையா, அழகப்பா அரசு கலைக்கல்லுாரி முன்னாள் கணிதத்துறை தலைவர் சுப்பிரமணியன் விருது வழங்கி பாராட்டினர். கோமேதகம் மண்டலத்தலைவர் மருதப்பன், நேஷனல் கேட்டரிங் கல்லுாரி தாளாளர் சையது, ஓவியம் லயன்ஸ் சங்க செயலாளர் செந்தில், பொருளாளர் குணாபாண்டியன், லட்சிய ஆசிரியை முருகேஸ்வரி முன்னிலை வகித்தனர்.லயன்ஸ் வட்டாரத் தலைவர் குள.சொக்கு வரவேற்றார். லட்சிய ஆசிரியர் சேவு.முத்துக்குமார், சாவித்திரி, ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் மணிமாறன் வாழ்த்தினர்.

லட்சிய ஆசிரியர்கள் செபாஸ்டின், ஸ்டீபன் தொகுத்து வழங்கினர்.2020ல் தினமலர் லட்சிய ஆசிரியர்கள் விருது பெற்ற மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 20 பேருக்கு, ஒளிரும் ஆசிரியர் விருது மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.நிகழ்ச்சியில் முன்னாள் துணைவேந்தர் சுப்பையா பேசுகையில், ''மாணவர்களிடம் வேறுபாடு பார்க்காமல், நடுநிலைமையோடு ஆசிரியர்கள் இருக்க வேண்டும். மதிப்பெண் எடுக்க வைப்பது மட்டும் ஆசிரியர் பணி அல்ல.

மாணவனின் பல தரப்பட்ட திறமைகளையும் வெளிக்கொணர வேண்டும். வாய்ப்பு கொடுக்கும் போது தான் மாணவர்கள் திறமைசாலிகளாக மாறுகிறார்கள். அவ்வாறான சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து ஆண்டுதோறும் தினமலர் லட்சிய ஆசிரியர் விருது வழங்குவது பாராட்டுக்குரியது என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X