பொது செய்தி

தமிழ்நாடு

தரமில்லா ரோடு: நடவடிக்கை உறுதி மதுரையில் அமைச்சர் ஏ.வ.வேலு பேட்டி

Added : ஆக 29, 2021
Share
Advertisement
மதுரை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தரமில்லாமல் அமைக்கப்பட்ட, ரோடுகள், பாலங்களை ஆய்வு செய்து ஒப்பந்ததாரர்கள், அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளோம் என மதுரையில் அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்தார்.அவர் கூறியதாவது: மதுரை புது நத்தம் ரோடு பறக்கும் பாலத்தில் சர்வீஸ் பாலம் அமைப்பதற்காக பொருத்திய கான்கிரீட் செக்மென்ட் விழுந்ததால் பாலம் முழுவதும் தரக்

மதுரை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தரமில்லாமல் அமைக்கப்பட்ட, ரோடுகள், பாலங்களை ஆய்வு செய்து ஒப்பந்ததாரர்கள், அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளோம் என மதுரையில் அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: மதுரை புது நத்தம் ரோடு பறக்கும் பாலத்தில் சர்வீஸ் பாலம் அமைப்பதற்காக பொருத்திய கான்கிரீட் செக்மென்ட் விழுந்ததால் பாலம் முழுவதும் தரக் கட்டுப்பாட்டு குழு மூலம் ஆய்வு செய்யப்படும். இதில் மாநில, மத்திய அரசுகள் இணைந்து செயல்பட்டு மக்களை காப்பதே கடமை.தமிழகத்தில் உள்ள 40 மண்டலங்களில் 25ல் தரமில்லா ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளன என ஆய்வு செய்து அறிந்தோம். அதில் விருதுநகர், சிவகங்கை, திருச்சி உட்பட 8 இடங்களில் தரமில்லாத ரோடு, பக்கவாட்டு சுவர்கள் அமைத்த ஒப்பந்ததாரர்களுக்கு நோட்டீஸ் வழங்கி, அதிகாரிகளின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இதுபோன்ற ரோடு, பால வேலைகள் நடக்கும் பகுதிகளில் பணியாற்றும் பொறியாளர், அவரது தகுதி, தொழிலாளர்கள் குறித்து தினமும் அறிக்கை தயாரித்து நெடுஞ்சாலை துறை மூத்த பொறியாளருக்கு அனுப்பும் முறை கொண்டுவரப்படும். இதற்கென உள்ள 10 குழுக்களை ஆய்வு பணியில் ஈடுபடுத்த உள்ளோம் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X