பொது செய்தி

தமிழ்நாடு

சினிபிட்ஸ்

Added : ஆக 29, 2021
Share
Advertisement
ரவிசங்கரை சந்தித்த ரஜினி!சினிமாவை போலவே, ஆன்மிகத்திலும் அதிக நாட்டம் கொண்ட ரஜினி, 'வாழும் கலை' அமைப்பின் நிறுவனரும், ஆன்மிக குருவுமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சமீபத்தில் சந்தித்து பேசியுள்ளார்.இச்சந்திப்பின் போது, ரஜினியின் மகள்களான சவுந்தர்யா, ஐஸ்வர்யா ஆகியோரும் இருந்தனர். சந்தித்த போது எடுத்த படத்தை, ஐஸ்வர்யா தனுஷ், 'டுவிட்டர்' பக்கத்தில்
 சினிபிட்ஸ்

ரவிசங்கரை சந்தித்த ரஜினி!

சினிமாவை போலவே, ஆன்மிகத்திலும் அதிக நாட்டம் கொண்ட ரஜினி, 'வாழும் கலை' அமைப்பின் நிறுவனரும், ஆன்மிக குருவுமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சமீபத்தில் சந்தித்து பேசியுள்ளார்.இச்சந்திப்பின் போது, ரஜினியின் மகள்களான சவுந்தர்யா, ஐஸ்வர்யா ஆகியோரும் இருந்தனர். சந்தித்த போது எடுத்த படத்தை, ஐஸ்வர்யா தனுஷ், 'டுவிட்டர்' பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.-

பஞ்சாயத்துக்கு உதவிய பஞ்சாயத்து!

ஷங்கர் -- வடிவேலு இடையிலான பஞ்சாயத்து, ஷங்கர் -- 'லைக்கா' உடனான பஞ்சாயத்தால் தீர்வாகியுள்ளது. 'இம்சை அரசன் 24ம் புலிகேசி' படத்திற்காக, வடிவேலு வாங்கிய முன்தொகை விவகாரத்துக்கு பதிலாக, ஷங்கர் இயக்கிய, 'இந்தியன் - 2' படப் பிரச்னையை லைக்கா முடித்துள்ளது. சமீபத்தில் சென்னை வந்த லைக்கா சுபாஷ்கரன், ஷங்கருடன் பேசி, அவர் மீது தொடர்ந்த வழக்கையும் வாபஸ் பெறுவதாக கூறியுள்ளாராம். 'இந்தியன் - 2' படப் பிரச்னை கிட்டத்தட்ட பேசி முடிக்கப்பட்டுள்ளது. பிரச்னையை முடித்த லைக்காவுக்காக, வடிவேலு மூன்று படங்கள் நடித்து கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

த்ரிஷாவுக்கு திருமணம்!

பிரசாந்த் -- சிம்ரன் நடித்த, 'ஜோடி' படத்தில் துணை நடிகையாக அறிமுகமான த்ரிஷா, 'மவுனம் பேசியதே' படத்தில் நாயகி அந்தஸ்துக்கு உயர்ந்தார். தொடர்ந்து, பல படங்களில் உச்ச நடிகர்களுடன் நடித்த த்ரிஷா, தென்னிந்திய திரையுலகின் இளவரசியாக வலம் வந்தார். தற்போது, 'பொன்னியின் செல்வன், கர்ஜனை, சதுரங்க வேட்டை - 2' உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன. மேற்கொண்டு எந்த புதுப் படத்திலும், 'கமிட்' ஆகவில்லை. காரணம் கேட்டால், வீட்டில் அவருக்கு மாப்பிள்ளை பார்த்து வருகின்றனராம்

9 விருதுகளை நோக்கி 'சைக்கோ'

மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி நடித்த 'சைக்கோ' படம், தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழாவான, 'சைமா 2020'ல், ஒன்பது விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த இசை உள்ளிட்ட ஒன்பது பிரிவுகளுக்கு 'சைக்கோ' போட்டியிடுகிறது. இவ்விழா செப்., 18, 19ல் ஐதராபாதில் நடக்க உள்ளது

வதந்திக்கு முற்றுப்புள்ளி!

காதலித்து மணந்த நாக சைதன்யாவை, நடிகை சமந்தா பிரிந்து விடுவார் என்ற தகவல், திரையுலகில் தீயாக பரவி வரும் வேளையில், சமந்தாவின் மாமனாரும், நடிகருமான நாகார்ஜுனாவுக்கு நேற்று பிறந்த நாள். அவருக்கு சமந்தா வாழ்த்து கூறி, பிரிவு தொடர்பான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சமந்தா கூறுகையில், 'உங்கள் மீதான என் மரியாதையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. உங்களுக்கு ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்க வாழ்த்துகள். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நாகார்ஜுனா மாமா' எனக் கூறியுள்ளார்.

எதிரி படத்தை பாராட்டிய கங்கனா!

அதிரடியான கருத்துக்களை துணிச்சலாக சொல்வதற்கு தயங்காதவர் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்த சமயத்தில், பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோஹரை, 'நெப்போடிசம் கிங்' அதாவது, 'வாரிசுகளுக்கு மட்டும் வாய்ப்பு கொடுக்கும் மன்னர்' என குறிப்பிட்டார்.தற்போது, கரண் ஜோஹர் தயாரித்து, சமீபத்தில் வெளியான 'ஷெர்ஷா' படத்தை கங்கனா பாராட்டியுள்ளார்.

'வீட்டுக்கு ஒரு நாய் தத்தெடுங்க!' நடிகை கனிகா, தன் செல்லப் பிராணியான மேகி என்கிற நாயுடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை, தன் 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் வெளியிட்டு, பொதுமக்களுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.அதில், 'நாய்களை விலைக்கு வாங்கும் பொருளாக கருதாதீர்கள்; நாய்களை தத்தெடுத்து, அவற்றையும் நம் வீட்டில் உள்ள ஒரு ஜீவனாக பாவித்து, அன்பு செலுத்தி வளருங்கள்' என கோரிக்கை விடுத்துள்ளார்.

'நெகட்டிவ்' ரோலில் காஜல்!-

சிரஞ்சீவியுடன் 'ஆச்சார்யா' படத்தை முடித்த காஜல் அகர்வால், அடுத்தபடியாக பிரவீன் சத்தாரு இயக்கும் தெலுங்கு படத்தில், நாகார்ஜுனாவுடன் நடிக்கிறார். இப்படத்தில், ரா ஏஜென்டாக, நாகார்ஜுனாவுடன் இணைந்து செயல்படும் கேரக்டராக இருந்தாலும், ஒரு கட்டத்தில் அவருக்கே எதிரியாகி விடும் ஒரு நெகட்டிவ் ரோலில், காஜல் நடிக்கிறாராம்.

ராஜன் மகனாக கென் கருணாஸ்

'வட சென்னை' படத்தில் முக்கிய கதாபாத்திரமான ராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து, இயக்குனர் வெற்றிமாறன் 'வெப் சீரிஸ்' இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதில், ராஜனாக நடித்துள்ள அமீரின் மகனாக, கென் கருணாஸ் நடிக்க உள்ளாராம். கென் கருணாஸ் ஏற்கனவே வெற்றிமாறனின், 'அசுரன்' படத்தில் தனுஷின் மகனாக நடித்திருந்தார்.-

அக்., 1ல் 'சிங்கப் பார்வை'

தமிழில், 'சேசிங், காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி' என, அதிகமான படங்களை கைவசம் வைத்துள்ளார் நடிகை வரலட்சுமி. அதுபோக, ஜேகே இயக்கத்தில், வரலட்சுமி நடிக்கும் படத்திற்கு, கமல் நடிப்பில் வெளிவந்த, 'ராஜபார்வை' என்ற தலைப்பை வைத்திருந்தனர். தற்போது தலைப்பை, 'சிங்கப் பார்வை' என மாற்றி, அக்., 1ல் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.***

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X