அரசியல் செய்தி

தமிழ்நாடு

சத்தியமூர்த்தி பவனில் வசந்தகுமார் படம் திறப்பு

Added : ஆக 29, 2021
Share
Advertisement
சென்னை-தமிழக காங்., முன்னாள் செயல் தலைவர் வசந்தகுமாரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சத்தியமூர்த்திபவனில், அவரது படத்திற்கு காங்., - எம்.எல்.ஏ.,க்கள் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.தமிழக காங்., தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில், வசந்தகுமாரின் முதலாம் ஆண்டு நினைவு தினம், நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த
 சத்தியமூர்த்தி பவனில்  வசந்தகுமார் படம் திறப்பு

சென்னை-தமிழக காங்., முன்னாள் செயல் தலைவர் வசந்தகுமாரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சத்தியமூர்த்திபவனில், அவரது படத்திற்கு காங்., - எம்.எல்.ஏ.,க்கள் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.

தமிழக காங்., தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில், வசந்தகுமாரின் முதலாம் ஆண்டு நினைவு தினம், நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வசந்தகுமார் படத்திற்கு, சட்டசபை காங்., தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், கட்சியினர்மலர் துாவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், காங்., - எம்.எல்.ஏ.,க்கள் ஹசன் மவுலானா, ஊர்வசி அமிர்தராஜ், எஸ்.டி.ராமச்சந்திரன், திருமகன் ஈ.வெ.ரா., உட்பட பலர் பங்கேற்றனர்.செல்வப்பெருந்தகை கூறுகையில், ''காங்கிரசுக்கு துாணாக விளங்கியவர் வசந்தகுமார். பொது வாழ்க்கையில் இருப்பவர் எப்படி இருக்க வேண்டும், எப்படி செயல்பட வேண்டும் என, வாழ்ந்து காட்டியவர்; முன்னுதாரணமாக திகழ்ந்தவர். காமராஜர் வழியில் செயல்பட்டவர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X