சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு சொத்து திருட்டு: போலீசார் வழக்கு பதிவு

Added : ஆக 29, 2021
Share
Advertisement
சென்னை-அரசு நிர்வகித்து வரும் அறக்கட்டளையின் சொத்தை திருடிய வாடகைதாரர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், தமிழகஅரசின் சொத்தாட்சியர் அலுவலகம் உள்ளது. இங்கு, கண்காணிப்பாளராக அப்துல் ரஜாக் என்பவர் பணிபுரிகிறார். இவர், வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார்:தமிழக அரசின் சொத்தாட்சியர் அலுவலகம் சார்பில், 150க்கும்

சென்னை-அரசு நிர்வகித்து வரும் அறக்கட்டளையின் சொத்தை திருடிய வாடகைதாரர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், தமிழகஅரசின் சொத்தாட்சியர் அலுவலகம் உள்ளது. இங்கு, கண்காணிப்பாளராக அப்துல் ரஜாக் என்பவர் பணிபுரிகிறார். இவர், வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார்:தமிழக அரசின் சொத்தாட்சியர் அலுவலகம் சார்பில், 150க்கும் மேற்பட்ட அறக்கட்டளைகள் நிர்வகிக்கப்படுகின்றன. இதன் கட்டுப்பாட்டில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும், 500க்கும் மேற்பட்ட அசையா சொத்துகள் உள்ளன.அந்த வகையில், சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலைய எல்லையில், ஆதாம் தெருவில், எம்.கே.பி., மரக்காயர் அறக்கட்டளை அலுவலக கட்டடமும் நிர்வகிக்கப்படுகிறது. இக்கட்டத்தில், செல்வ மகேஷ் ராஜா என்பவர் வாடகைக்கு இருந்து வந்தார். இவர், இந்த கட்டடத்தை திரும்ப ஒப்படைப்பது குறித்து விண்ணப்பம் செய்துள்ளார்.

இரு தினங்களுக்கு முன், அந்த கட்டடத்தில், எங்கள் அலுவலக இளைநிலை பொறியாளர் மற்றும் ஊழியர்கள் ஆய்வு செய்தனர். அப்போது மர்ம நபர்கள், ஜன்னல், கதவு உள்ளிட்ட பொருட்களை அகற்றினர். இதுபற்றி கேட்டபோது, செல்வ மகேஷ் ராஜா உத்தரவின்படி, பொருட்களை அகற்றி வருகிறோம் என்றனர். கட்டடத்தின் பல இடங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

அரசுக்கு சொந்தமான அறக்கட்டளை சொத்தை, அத்துமீறி சுய லாபத்திற்காக செல்வ மகேஷ் ராஜா, 35 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடி உள்ளார். இவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து, வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X