பொது செய்தி

தமிழ்நாடு

ஊசி போடாவிட்டால் அனுமதியில்லை பேராசிரியர்களுக்கு கட்டுப்பாடு

Added : ஆக 29, 2021
Share
Advertisement
சென்னை'தடுப்பூசி போட்ட பிறகே, பேராசிரியர், பணியாளர்களை கல்லுாரி பணிக்கு அனுமதிக்க வேண்டும்' என, கல்லுாரி முதல்வர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், நாளை மறுதினம் முதல், மாநிலம் முழுதும் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படுகின்றன. பள்ளிகளில், ஒன்பது முதல் பிளஸ் 2 வரை நேரடி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. வாரத்தில் ஆறு

சென்னை'தடுப்பூசி போட்ட பிறகே, பேராசிரியர், பணியாளர்களை கல்லுாரி பணிக்கு அனுமதிக்க வேண்டும்' என, கல்லுாரி முதல்வர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், நாளை மறுதினம் முதல், மாநிலம் முழுதும் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படுகின்றன. பள்ளிகளில், ஒன்பது முதல் பிளஸ் 2 வரை நேரடி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. வாரத்தில் ஆறு நாட்களும் பள்ளிகளில் வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது.கல்லுாரிகளில் சுழற்சி முறையில் பாடங்கள் நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இறுதி ஆண்டு மாணவர்களுக்கு, வாரத்தில் ஆறு நாட்களும், மற்ற மாணவர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்களும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.இந்நிலையில், கல்லுாரிகளை திறக்கும் நாளில், பணிக்கு வரும் பேராசிரியர்கள், பணியாளர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுஉள்ளது.ஊசி போடாத பேராசிரியர்கள், பணியாளர்கள் பணிக்கு வர வேண்டாம் என்றும், அவர்களை தடுப்பூசி போட்ட பிறகே பணிக்கு அனுமதிக்க வேண்டும் என்றும், கல்லுாரி முதல்வர்களுக்கு, இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது.

கல்லுாரி திறந்ததும், முதல் இரண்டு நாட்களுக்கு மாணவர்களுக்கு தடுப்பூசி முகாம்கள் நடத்தவும், 18 வயது நிறைந்த அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்றும் சுகாதாரத்துறை உத்தரவிட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X