சம்பவம் செய்தி

தமிழ்நாடு

23,000 லி., கலப்பட டீசல் பறிமுதல் தனியார் நிறுவன மேலாளர் கைது

Added : ஆக 29, 2021
Share
Advertisement
சென்னை-மும்பையில் இருந்து, அரியலுாருக்கு கடத்தி வரப்பட்ட, 23 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசலை பறிமுதல் செய்த போலீசார், தனியார் நிறுவன மேலாளர் மற்றும் டேங்கர் லாரி டிரைவரை கைது செய்தனர்.அரியலுார் மாவட்டம், கீழப்பழூர், மவத்தான்குளம் பிரிவு பாதை அருகே, மர்மமான முறையில், டேங்கர் லாரி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அந்த லாரியை, குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு

சென்னை-மும்பையில் இருந்து, அரியலுாருக்கு கடத்தி வரப்பட்ட, 23 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசலை பறிமுதல் செய்த போலீசார், தனியார் நிறுவன மேலாளர் மற்றும் டேங்கர் லாரி டிரைவரை கைது செய்தனர்.

அரியலுார் மாவட்டம், கீழப்பழூர், மவத்தான்குளம் பிரிவு பாதை அருகே, மர்மமான முறையில், டேங்கர் லாரி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அந்த லாரியை, குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார், நேற்று முன்தினம் திடீர் சோதனை செய்தனர்.அப்போது அந்த லாரியில், மும்பையில் இருந்து, 23 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.

இந்த கலப்பட டீசல், சட்ட விரோதமாக அரியலுாரில் உள்ள டீம் தாய் அகைன் ரோடுவேஸ் என்ற நிறுவனத்தின் லாரிகளுக்கு பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, கலப்பட டீசலை பறிமுதல் செய்த போலீசார், அந்த நிறுவனத்தின் மேலாளர் ஷானு அகமது, உ.பி., மாநிலத்தைச் சேர்ந்த டேங்கர் லாரி டிரைவர் ஜெய்பிரகாஷ் ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X