பொது செய்தி

தமிழ்நாடு

ஒப்பந்ததாரர் அலட்சியத்தால் பறக்கும் பாலத்தில் 'கான்கிரீட் செக்மென்ட்' விழுந்து நொறுங்கியது நத்தம் ரோட்டில் அடிக்கடி நடக்கும் விபத்து

Added : ஆக 29, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை புது நத்தம் ரோடு ஐ.ஓ.சி., ரவுண்டானா முதல் செட்டிகுளம் வரை 7.3 கி.மீ., அமைக்கப்படும் பறக்கும் பாலத்தில் சர்வீஸ் பாலம் அமைக்க பொருத்தப்பட்ட 'கான்கிரீட் செக்மென்ட்' விழுந்து நொறுங்கியது. ஒப்பந்ததாரர் அலட்சியத்தால் பாதுகாப்பின்றி நடக்கும் பணிகளால் அடிக்கடி விபத்து நடக்கும் நிலையில், நொறுங்கிய பாலத்தில் சிக்கி தொழிலாளி பலியானதால் மக்கள் உயிர் பயத்தில் பால
ஒப்பந்ததாரர் அலட்சியத்தால் பறக்கும் பாலத்தில் 'கான்கிரீட் செக்மென்ட்' விழுந்து நொறுங்கியது    நத்தம் ரோட்டில் அடிக்கடி நடக்கும் விபத்து

மதுரை : மதுரை புது நத்தம் ரோடு ஐ.ஓ.சி., ரவுண்டானா முதல் செட்டிகுளம் வரை 7.3 கி.மீ., அமைக்கப்படும் பறக்கும் பாலத்தில் சர்வீஸ் பாலம் அமைக்க பொருத்தப்பட்ட 'கான்கிரீட் செக்மென்ட்' விழுந்து நொறுங்கியது.

ஒப்பந்ததாரர் அலட்சியத்தால் பாதுகாப்பின்றி நடக்கும் பணிகளால் அடிக்கடி விபத்து நடக்கும் நிலையில், நொறுங்கிய பாலத்தில் சிக்கி தொழிலாளி பலியானதால் மக்கள் உயிர் பயத்தில் பால பகுதியில் பயணிக்கின்றனர்.மதுரை புது நத்தம் ரோடு ஐ.ஓ.சி.,- செட்டிகுளம் வரை ரூ.670 கோடியில் 7.3 கி.மீ., ல் பறக்கும் பாலம் கட்டும் பணி 2018ல் துவங்கியது. செட்டிகுளம் - நத்தம் 33.4 கி.மீ., 4 வழிச்சாலையும் அமைகிறது. மத்திய அரசின் பாரத்மாலா திட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை துறை, ஜெ.எம்.சி., புராஜக்ட்ஸ் இந்தியா பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இரண்டு சர்வீஸ் பாலங்கள்பாலத்தில் மேல் தளம் அமைக்க 200க்கும் மேற்பட்ட மெகா கான்கிரீட் பில்லர்கள் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு பில்லர்களுக்கும் இடையில் 1000 கிலோ கொண்ட கான்கிரீட் செக்மென்ட் பொருத்தும் பணியும், கீழே இறங்க, மேலே ஏற நாகனாகுளம், திருப்பாலையில் தலா 800 அடி உயர்மட்ட சர்வீஸ் பாலங்கள் அமைக்கும் பணிகள் நடக்கிறது.800 அடி பாலத்தில் 114 அடிக்கு ஒரு கான்கிரீட் பில்லர் என 7 துாண்கள் கட்டப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் நாகனாகுளத்தில் ஒரு பகுதியில் 4 - 5 பில்லர்களில் பொருத்திய 'கான்கிரீட் செக்மென்ட்'டை சரி செய்யும் பணி நேற்று முன்தினம் மாலை நடந்தது.

தொழிலாளி ஒருவர் பலிஹைட்ராலிக் ஜாக்கி மூலம் பொருத்தப்பட்ட செக்மென்ட்டின் 4ம் பில்லரில் 2 தொழிலாளர்கள் நின்று பணி செய்தனர். அப்போது ஜாக்கியில் இணைக்கும் பிரஷர் குழாய் அறுந்து விழுந்தது. அடுத்த நொடியே பலத்த சத்தத்துடன் கான்கிரீட் செக்மென்ட்டும் விழுந்து நொறுங்கியது. கீழே விழுந்த தொழிலாளி சுராஜ் குமார் தப்பினார். உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஆகாஷ் சிங் 26 பலியானார்.அடிக்கடி நடக்கும் விபத்துபறக்கும் பாலம் நடக்கும் பகுதியில் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் இரும்பு கர்டர்கள் உள்ளிட்ட பொருட்களை பணியாளர்கள் கையாள்வதாலும், மேடு பள்ளமான ரோட்டில் கற்கள் சிதறி கிடப்பதாலும் அடிக்கடி விபத்து நடக்கிறது.

திருப்பாலை பஸ் ஸ்டாப் பகுதியில் மெகா சைஸ் இரும்பு கம்பி விபத்து ஏற்படுத்தும் வகையில் ரோட்டில் கிடக்கிறது. இங்கு 2வது சர்வீஸ் பாலம் அமைக்க பொருத்தப்பட்ட இரும்பு கர்டர்களும் எந்நேரமும் விழும் நிலையில் உள்ளது.மக்கள் கோரிக்கையை ஏற்காதமுன்னாள் அதிகாரிகள்மதுரை பறக்கும் பாலத்தில் நடந்த விபத்து குறித்து பார்வையிட்ட அமைச்சர் மூர்த்தி கூறியதாவது: மத்திய அரசு நெடுஞ்சாலை துறை மூலம் 2 ஆண்டுகளாக பறக்கும் பாலம் அமைக்கும் பணிகளை செய்கிறது. வெளியூரில் இருந்ததால் பால விபத்து குறித்து நேற்று முன்தினம் கலெக்டர், மாநகராட்சி கமிஷனரிடம் கேட்ட போது ஒரு தொழிலாளி இறந்ததாக கூறினர். இப்பகுதி மக்கள் கோரிக்கையாக ரோடு அமைத்து பின் பணிகளை செய்யுங்கள் என முன்னாள் அதிகாரிகளிடம் கூறியும் அவர்கள் அதை ஏற்கவில்லை. ஒப்பந்ததாரரின் கவனக்குறைவால் நடந்த விபத்து குறித்து தரக்கட்டுப்பாட்டு குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை அளிப்பர் என்றார்.

பொறுப்பாளர்கள் மூவர் மீது வழக்குவிபத்து தொடர்பாக ஒப்பந்ததாரரான மும்பை ஜெ.எம்.சி., நிறுவனம் சார்பில் திட்ட பொறுப்பாளர்களாக பிரதீப்குமார் ஜெயின், சந்தியேந்தர் வர்மா, பாஸ்கர் மற்றும் சிலர் மீது இயந்திரத்தை அஜாக்கிரதையாக பயன்படுத்தியது, விபத்தில் உயிர் பலியை ஏற்படுத்தியது ஆகிய பிரிவுகளின்கீழ் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கைது இல்லை.ஒப்பந்ததாரர் அலட்சியமே விபத்திற்கு காரணம்பால பகுதியில் ஆய்வு செய்த அமைச்சர் ஏ.வ.வேலு கூறியதாவது: இந்த விபத்துக்கு ஒப்பந்ததாரரின் அலட்சியமே காரணம். 160டன் கான்கிரீட் செக்மென்ட் துாக்க அதை விட அதிக டன் ஹைட்ராலிக் இயந்திரம் பயன்படுத்த வேண்டும்.

தற்போதைய இயந்திரம் குறித்து ஆய்வு செய்ய கூறியுள்ளோம். பணியிடத்தில் மேற்பார்வை பொறியாளர் இல்லை. தொழிலாளர்களே இருந்துள்ளார், முறையான பாதுகாப்பின்றி பணி நடந்துள்ளது.என்.ஐ.டி., தொழில் நுட்ப நிபுணர் திருச்சி பாஸ்கர் குழுவினர் தேசிய நெடுஞ்சாலை துறைக்கு விபத்து குறித்து அறிக்கை தாக்கல் செய்வர். பாலத்தை முழுமையாக ஆய்வும் செய்வர். விபத்தில் பலியான தொழிலாளிக்கு நிதியுதவி அளிப்பது குறித்து முதல்வர் அறிவிப்பார் என்றார். அமைச்சர் தியாகராஜன், கலெக்டர் அனிஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் உடன் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X