அரசியல் செய்தி

தமிழ்நாடு

பழைய ஓய்வூதிய திட்டம் ராமதாஸ் வலியுறுத்தல்

Added : ஆக 29, 2021
Share
Advertisement
சென்னை-'ஆசிரியர் - அரசு ஊழியர்கள், டாக்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:கடந்த 2003ம் ஆண்டுக்கு பின் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு, புதிய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். பல்வேறு நிலைகளில் நிலவும் ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும்.தமிழக அரசின்

சென்னை-'ஆசிரியர் - அரசு ஊழியர்கள், டாக்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:கடந்த 2003ம் ஆண்டுக்கு பின் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு, புதிய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். பல்வேறு நிலைகளில் நிலவும் ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும்.தமிழக அரசின் டாக்டர்களுக்கு, மத்திய அரசின் டாக்டர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும்.

கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிட்ட தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை தமிழக அரசு, நிதி நெருக்கடி காரணத்தைக் கூறி புறக்கணிக்காமல் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.ராமதாஸ் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக் போட்டிகளில், டேபிள் டென்னிஸ் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று, இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள வீராங்கனை பவினா பென் படேலுக்கும், உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள நிஷாத் குமாருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மாநில நிர்வாகி நீக்கம்பா.ம.க., தலைமை அலுவலக அறிவிப்பு:மதுரை, அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த பா.ம.க., இளைஞரணி மாநில துணைச் செயலர் மாரிச்செல்வம், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வருவதால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X