மாற்று திறனாளிகளின் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும்: கமல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாற்று திறனாளிகளின் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும்: கமல்

Added : ஆக 29, 2021 | கருத்துகள் (1)
Share
சென்னை--'மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்' என, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில், மாற்றுத் திறனாளிகளுக்கு 3,000 முதல் 5,000 ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது.தமிழகத்திலும் இது நடைமுறைக்கு வரவேண்டும்.அரசுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களிலும், தனியார் வேலை வாய்ப்புகளிலும்,
 மாற்று திறனாளிகளின் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும்: கமல்

சென்னை--'மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்' என, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில், மாற்றுத் திறனாளிகளுக்கு 3,000 முதல் 5,000 ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது.தமிழகத்திலும் இது நடைமுறைக்கு வரவேண்டும்.அரசுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களிலும், தனியார் வேலை வாய்ப்புகளிலும், மாற்றுத் திறனாளிகளுக்கு, 5 சதவீத இடஒதுக்கீடை உறுதி செய்ய வேண்டும்.

பார்வைக் குறைபாடு உடையவர்கள் கல்வி தடைபடாமல் இருக்க, மாவட்டங்கள் தோறும் சிறப்புப் பள்ளி ஒன்றை உருவாக்க வேண்டும்.தொழில் முனைவோராக விரும்பும் மாற்றுத் திறனாளிகளுக்கு, வங்கிக் கடன் எளிதில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.கடுமையான மாற்றுத் திறனாளிகளின் மருத்துவச் சிகிச்சைக்கு உதவும் வகையில், முதல்வர் மருத்துவக் காப்பீடு வசதி வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு கமல் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X