பொது செய்தி

தமிழ்நாடு

ஐந்திணை மரபணு பூங்காவில் குவிந்த பயணிகள் போட்டோ, வீடியோ எடுத்து மகிழ்ச்சி

Added : ஆக 30, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே ஐந்திணை மரபணு பூங்காவிற்கு வந்த மக்கள் இரண்டு நாட்களாக போட்டோ எடுத்து மகிழ்கின்றனர்.ராமநாதபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் அச்சடிப்பரம்பு கிராமம் அருகில் அரசு தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான ஐந்திணை மரபணு பூங்கா ஊள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் நீர்த்தடாகங்கள், புல்வெளிகள், சிறுவர் விளையாட்டு திடல் உள்ளது.ஆங்காங்கே வெயிலில்
 ஐந்திணை மரபணு பூங்காவில் குவிந்த பயணிகள்  போட்டோ, வீடியோ எடுத்து மகிழ்ச்சி

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே ஐந்திணை மரபணு பூங்காவிற்கு வந்த மக்கள் இரண்டு நாட்களாக போட்டோ எடுத்து மகிழ்கின்றனர்.

ராமநாதபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் அச்சடிப்பரம்பு கிராமம் அருகில் அரசு தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான ஐந்திணை மரபணு பூங்கா ஊள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் நீர்த்தடாகங்கள், புல்வெளிகள், சிறுவர் விளையாட்டு திடல் உள்ளது.ஆங்காங்கே வெயிலில் இளைப்பாற தென்னங்கீற்றாலான குடில்கள் உள்ளன. மணற்குன்று, நீர் தடாகத்தில் நீந்தி விளையாடும் வாத்துகளை கண்டு ரசிக்கின்றனர். விடுமுறை நாட்களில் இங்கு அதிகளவில் மக்கள்வந்து செல்கின்றனர்.

பொழுதுபோக்கு இடமாக உள்ளதால் சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் விளையாடுகின்றனர்.கடந்த இரண்டு நாட்களாக விடுமுறை என்பதாலும், அதிகளவில் முகூர்த்தங்கள் இருந்ததாலும், நேற்று பொதுமக்களோடு புதுமணத்தம்பதிகளும் இங்கு குவிந்தனர்.விதவிதமாக போஸ் கொடுத்து போட்டோ, வீடியோ எடுத்து மகிழ்ந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X