அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரூ.625 கோடியில் புதிய மின்மாற்றிகள் திட்டத்தை துவக்கி வைத்தார் ஸ்டாலின்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
சென்னை--தமிழகத்தில், 625 கோடி ரூபாய் மதிப்பில் 8,905 புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணியை முதல்வர் ஸ்டாலின், கொளத்துாரில் நேற்று துவக்கி வைத்தார்.தமிழகத்தில் மின் அழுத்த பிரச்னையை தவிர்க்க, 625 கோடி ரூபாய் மதிப்பில், 8,905 புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட உள்ளன.இதற்கான துவக்க விழா, சென்னை கொளத்துார், ஜி.கே.எம்.காலனியில் நேற்று நடந்தது.திட்டப்பணிகளை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி
 ரூ.625 கோடியில் புதிய மின்மாற்றிகள் திட்டத்தை துவக்கி வைத்தார் ஸ்டாலின்

சென்னை--தமிழகத்தில், 625 கோடி ரூபாய் மதிப்பில் 8,905 புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணியை முதல்வர் ஸ்டாலின், கொளத்துாரில் நேற்று துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் மின் அழுத்த பிரச்னையை தவிர்க்க, 625 கோடி ரூபாய் மதிப்பில், 8,905 புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட உள்ளன.இதற்கான துவக்க விழா, சென்னை கொளத்துார், ஜி.கே.எம்.காலனியில் நேற்று நடந்தது.திட்டப்பணிகளை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த பணிகளை நான்கு மாதங்களில் முடிக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், கொளத்துார் தொகுதியில் ஆறு இடங்களில், பணி நிறைவு பெற்ற வளைய சுற்றுத்தர அமைப்புடன் கூடிய மின்மாற்றிகளை துவங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, மின் வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.மேலும், கொளத்துாரில் உள்ள தனியார் அகாடாமியில், தையல் பயிற்சி முடிந்த 300 பெண்களுக்கு, தையல் இயந்திரங்களையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X