மாணவர் உட்பட 2 பேர் கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவர் உட்பட 2 பேர் கொலை

Added : ஆக 30, 2021
Share
திருநெல்வேலி,---திருநெல்வேலி, துாத்துக்குடியில் முன்விரோதத்தில் கல்லுாரி மாணவர் உட்பட இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே கூத்தங்குழி கடற்கரை கிராமத்தில் கீழத்தெரு, மேலத்தெரு மக்களுக்கு அடிக்கடி மோதல் ஏற்படும். இந்நிலையில் பாலிடெக்னிக் மாணவரான கீழத்தெரு அபினேஷ் 20, நேற்று முன்தினம் இரவில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

திருநெல்வேலி,---திருநெல்வேலி, துாத்துக்குடியில் முன்விரோதத்தில் கல்லுாரி மாணவர் உட்பட இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே கூத்தங்குழி கடற்கரை கிராமத்தில் கீழத்தெரு, மேலத்தெரு மக்களுக்கு அடிக்கடி மோதல் ஏற்படும். இந்நிலையில் பாலிடெக்னிக் மாணவரான கீழத்தெரு அபினேஷ் 20, நேற்று முன்தினம் இரவில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கூடங்குளம் போலீசார் 5 பேர் மீது வழக்குபதிவு செய்து தேடுகின்றனர்.துாத்துக்குடி கொலைதூத்துக்குடி தெர்மல் நகர் ரமேஷ் 20. சில தினங்களுக்கு முன்பு திருமண மண்டபத்தில் குடிபோதையில் சிலர் நடனமாடினர். இதுபற்றி போலீசார் விசாரித்தனர். ரமேஷ்தான் புகார் கூறியிருக்கலாம் என அவரை கொலை செய்ய ஒரு கும்பல் திட்டமிட்டது. முருகேசன் நகரில் நண்பர் வீட்டில் துாங்கிய ரமேைஷ கும்பல் வெட்டி கொன்றது. வடபாகம் போலீசார் தூத்துக்குடி அமுதா நகர் ராஜபாண்டி 21, மூன்றாவது மைல் முத்துப்பாண்டி 20 உள்பட 7 பேரை தேடுகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X