பொது செய்தி

தமிழ்நாடு

பொலிவிழந்த வத்திராயிருப்பு பஸ் ஸ்டாண்ட் ஆண்டுகள் பல கடந்தும் தொடரும் அவலம்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
வத்திராயிருப்பு : குண்டும், குழியுமாகவும், கழிவுகள் சேர்ந்து அசுத்தமாக காணப்படும் வத்திராயிருப்பு பஸ் ஸ்டாண்டை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் இருந்து பிரிந்து புதிய தாலுகாவாக வத்திராயிருப்பு அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே பஸ் ஸ்டாண்ட் உள்ள நிலையில் தாலுகா அறிவிப்புக்கு பின் அரசு பஸ் டெப்போவும்
 பொலிவிழந்த வத்திராயிருப்பு பஸ் ஸ்டாண்ட்   ஆண்டுகள் பல கடந்தும் தொடரும் அவலம்

வத்திராயிருப்பு : குண்டும், குழியுமாகவும், கழிவுகள் சேர்ந்து அசுத்தமாக காணப்படும் வத்திராயிருப்பு பஸ் ஸ்டாண்டை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் இருந்து பிரிந்து புதிய தாலுகாவாக வத்திராயிருப்பு அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே பஸ் ஸ்டாண்ட் உள்ள நிலையில் தாலுகா அறிவிப்புக்கு பின் அரசு பஸ் டெப்போவும் துவங்கப்பட்டது. இந்நிலையில் வத்திராயிருப்பு, அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தினமும் விருதுநகர், மதுரை, தேனி போன்ற நகரங்களுக்கு பயணித்து வருகின்றனர்.

ஆனால் இவர்களின் தேவைக்கு ஏற்ப பஸ்கள் இயக்கப்படவில்லை.இந்நிலையில் பல ஆண்டுகளாகவே வத்திராயிருப்பு பஸ் ஸ்டாண்ட் குண்டும் குழியுமாகவும், கழிவுகள் குப்பைகள் சேர்ந்தும் பொலிவிழந்தும் காணப்படுகிறது.தற்போது சென்னைக்கு இரண்டு பஸ்கள் இயக்கப்படும் நிலையில் முன்கூட்டியே வரும் பயணிகள் இருப்பதற்கு போதிய வசதிகள் இல்லை.எனவே, வத்திராயிருப்பு பஸ் ஸ்டாண்டில் ரோட்டை சீரமைத்து, சுகாதார வளாகங்களை சுத்தம் செய்து, போதிய இருக்கை, குடிநீர் வசதிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். புதுப் பொலிவுடன் இயங்க அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X