சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரம் ஏ.டி.எம்.,ல் திருட்டு: பெண் கைது

Added : ஆக 30, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்,--ராமநாதபுரத்தில் காணாமல் போன வங்கி ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி வங்கி கணக்கில் இருந்த ரூ.1.40 லட்சத்தை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.ராமநாதபுரம் பாரதிநகர் காலாங்கரையை சேர்ந்த கோவிந்தன் மனைவி நாச்சியார் 67. இவரது தம்பி சந்திரசேகர் ரூபவ் துபாயில் வசிக்கிறார். நாச்சியார் அவரது ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி வந்தார். வீட்டில் வைத்திருந்த ஏ.டி.எம்., கார்டு

ராமநாதபுரம்,--ராமநாதபுரத்தில் காணாமல் போன வங்கி ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி வங்கி கணக்கில் இருந்த ரூ.1.40 லட்சத்தை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் பாரதிநகர் காலாங்கரையை சேர்ந்த கோவிந்தன் மனைவி நாச்சியார் 67. இவரது தம்பி சந்திரசேகர் ரூபவ் துபாயில் வசிக்கிறார். நாச்சியார் அவரது ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி வந்தார். வீட்டில் வைத்திருந்த ஏ.டி.எம்., கார்டு காணாமல் போனது.வங்கி கணக்கில் இருந்து அந்த ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி ரூ.1.40 லட்சம் திருடப்பட்டது. கேணிக்கரை போலீசார் பக்கத்து வீட்டில் வசித்த ராமநாதபுரம் அண்ணா நகரை சேர்ந்த மாரியம்மாள் 50, கார்டை திருடி பணம் எடுத்தது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து, ரூ.21 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X