சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

கருணாநிதியின் 'புகழ்' பரவட்டும்!

Updated : செப் 01, 2021 | Added : ஆக 30, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
டாக்டர் ரா.அசோகன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புத்தகங்கள் அனைத்தையும் அரசுடைமையாக்க வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலினுக்கு, தி.மு.க., இலக்கிய அணி செயலர் இந்திரகுமாரி கடிதம் எழுதியுள்ளார்; சரி தான்...கவிஞர் கண்ணதாசன், 'வனவாசம்' என்ற சுயசரிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தன்னை தன்னடக்கத்துடன், 'அவன்' என்றே குறிப்பிடுவார்.அதில்
 இது உங்கள் இடம்டாக்டர் ரா.அசோகன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புத்தகங்கள் அனைத்தையும் அரசுடைமையாக்க வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலினுக்கு, தி.மு.க., இலக்கிய அணி செயலர் இந்திரகுமாரி கடிதம் எழுதியுள்ளார்; சரி தான்...கவிஞர் கண்ணதாசன், 'வனவாசம்' என்ற சுயசரிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தன்னை தன்னடக்கத்துடன், 'அவன்' என்றே குறிப்பிடுவார்.

அதில் கருணாநிதி பற்றி நிறைய கூறிஇருப்பார். அதில் ஒன்றை கீழே படியுங்கள்...தன் எழுத்துக்களை, 'அவன்' படிப்பதில்லை என்பதிலே, நண்பர் கருணாநிதிக்கு அசாத்திய கோபம் வரும். ஒரு நாள் கருணாநிதி, தன் புத்தகங்களை கொடுத்து படிக்க சொன்னார்.'வாழ முடியாதவர்கள்' என்ற தலைப்பில் அந்த புத்தகம் வெளியாகியிருந்தது. கதையென்ன தெரியுமா?

மனைவியை இழந்த ஒரு போலீஸ்காரன். வறுமை தவழ்ந்து விளையாடும் சின்னஞ்சிறு வீடு, அவன் குடியிருப்பு. அவனின் மகள் திருமணத்திற்காக காத்து கிடக்கிறாள். இறுதியில் தந்தை, தன் மகளையே மனைவியாக்கி கொள்கிறான்.இவ்வாறு கதாசிரியர், அந்த கதையை முடிக்கிறார்.மேலை நாட்டு ஆபாச களஞ்சியங்களான, 'மாபசான்' கூட்டத்தினருக்கு கூட, இத்தகைய கற்பனை தோன்றியதில்லை. அதனால் தான், 'மாபசான் கருணாநிதி' என பெயர் சூட்டினார் கவிஞர் கண்ணதாசன்.

கருணாநிதி எழுதியவை அனைத்தும், 'வாழ முடியாதவர்கள்' என்ற புத்தகம்போன்றது தான். 'குமரிக்கோட்டம், ரோமாபுரி ராணிகள், கபோதிபுரக் காதல்' போன்ற காம ரச புத்தகங்களை எழுதினார் தி.மு.க., முன்னாள் முதல்வர் அண்ணாதுரை.இப்படி அண்ணாதுரையும், கருணாநிதியும் தமிழ் கலாசாரத்தை கெடுத்து குட்டிச் சுவராக்கினர்.

கருணாநிதியின், 'வாழ முடியாதவர்கள்' என்ற புத்தகத்தை, ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும். அப்போது தான் கருணாநிதியின் 'புகழ்' நாடு முழுதும் பரவும்.


மீண்டு எழ ஒரே வழி!வி.ஹெச்.கே.ஹரிஹரன், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது போல, மேற்கு வங்கத்தில் இந்திய செக்யூலர் பிரன்ட் என்ற ஐ.எஸ்.எப்., கட்சியுடன் கூட்டணி அமைத்தது தவறு என, மார்க்சிஸ்ட் கம்யூ., இப்போது கூறுகிறது.மே மாதம் நடந்த மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ், பா.ஜ., மற்றும் காங்., -- இடதுசாரி கூட்டணி இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டது.

காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகள் தங்களது கூட்டணியில், ஷெரிப் அப்பாஸ் சித்திக்-கின் ஐ.எஸ்.எப்., கட்சியையும் சேர்த்து கொண்டன.சுதந்திரம் பெற்ற பின், மேற்கு வங்க சட்டசபையில் ஒரு கம்யூ., - எம்.எல்.ஏ., கூட இடம் பெறாதது 2021 தேர்தலில் தான். இது அக்கட்சியின் அஸ்திவாரத்தை அசைத்துள்ளது.

இந்த மூன்றாவது அணியில் ஒருங்கிணைப்பு இல்லை. முஸ்லிம்களுக்கு மட்டுமான கட்சி ஐ.எஸ்.எப்., என்ற எண்ணத்தை, மக்களிடம் இருந்து மாற்ற முடியவில்லை. காங்., - கம்யூ., கூட்டணிக்கு மக்கள் ஆதரவு சரிந்தது. எதிர்முனையில் இருந்த பா.ஜ., நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது. திரிணமுல் காங்கிரஸ் மீண்டும் அரியணை ஏறியுள்ளது.கடந்த 1950 மற்றும் 1960களில் தேசிய அளவில் காங்கிரசுக்கு எதிராக வலிமையான, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக கம்யூனிஸ்ட் இருந்தது.மூடநம்பிக்கை, ஒடுக்கப்பட்டோர் மீதான அடக்குமுறை ஆகியவற்றை தீவிரமாக எதிர்த்து போராடினர்.

அதனால் லோக்சபாவில் கம்யூனிஸ்டுகளின் குரல் ஓங்கி ஒலித்தது.நாளடைவில், 'மதவாதத்தை ஒழிக்கிறோம்' என்ற பெயரில், இன்னொரு மதத்திற்கு ஆதரவாக செயல்பட்டதால், மக்கள் அவர்களை ஆதரிக்கவில்லை.ஐ.எஸ்.எப்., கட்சியுடன் கூட்டணி அமைத்தது தவறு என்பதை தாமதமாக புரிந்து கொண்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூ., இனியாவது சித்தாந்தத்துடன் சமரசம் செய்து கொள்ளாமல், மக்களுக்காக போராட வேண்டும். மீண்டு எழ அதுவே வழி!


அது அவருக்கே தெரியும்!நா.மு.நாச்சியப்பன், காரைக்குடி,சிவகங்கை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்:

'அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றுவோம்' என, முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார்.தமிழகத்தை 1967 முதல் இன்று வரை, இரு கழகங்களும் தான் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. ஒவ்வொரு தேர்தலிலும், இரு கழகங்களும் எண்ணற்ற வாக்குறுதிகள் அளிப்பதும், ஆட்சியில் அமர்ந்ததும் ஆண்டுதோறும் 'பட்ஜெட்' என்ற பெயரில், திட்டங்கள் குறித்து நீண்ட பட்டியல் வெளியிடுவதும் வாடிக்கையாக உள்ளது.

இவர்களுடைய தேர்தல் வாக்குறுதிகளும், பட்ஜெட்டும் உண்மையாக இருந்திருந்தால், தமிழகம் இன்று உலக அளவில் மிக உயர்ந்த இடத்தில் இருந்திருக்கும்; அப்படி இருக்கிறதா?தேர்தலில் வாக்குறுதிகளை அள்ளி வீசுவதும், ஆட்சிக்கு வந்த பின் அதை கண்டுகொள்ளாமல் இருப்பதும் கழகங்களின் வழக்கம்.தற்போதைய நிதி அமைச்சர் தியாகராஜன், 'தமிழக நிதி நிலையை சரி செய்ய மூன்றாண்டுகள் தேவை' எனக் கூறியுள்ளார். 'ஐந்து ஆண்டுகள்' என்பதை தான், அவர் மூன்று ஆண்டுகள் என சொல்லியிருப்பாரோ?

நிதி பற்றாக்குறை அதிகமாக இருக்கும்போது, அரசு பேருந்தில் மகளிருக்கு ஏன் இலவச பயணம்? 2,500 கோடி ரூபாயில் நான்கு பூங்காக்கள் அமைப்பது இப்போது அவசியமா?முதல்வர் ஸ்டாலின் அளித்த உறுதிமொழியை யாரும் நம்ப மாட்டார்கள் என்பது அவருக்கே தெரியும்!

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
31-ஆக-202100:08:32 IST Report Abuse
Anantharaman Srinivasan வறுமை தவழ்ந்து விளையாடும் சின்னஞ்சிறு வீடு, அவன் குடியிருப்பு. அவனின் மகள் திருமணத்திற்காக காத்து கிடக்கிறாள். இறுதியில் தந்தை, தன் மகளையே மனைவியாக்கி கொள்கிறான்.இவ்வாறு கருணாநிதி , அந்த கதையை முடிக்கிறார். வாழமுடியாதவர்கள் கதை ஒருவகையில் பெரியாரை ஜாடையாக சொல்வதுபோல் உள்ளது..
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
30-ஆக-202115:43:35 IST Report Abuse
D.Ambujavalli பெண்கள் யாரும் பேருந்துக் கட்டணம் கூட தர வழியில்லை என்று கெஞ்சினார்களா? கட்டிடக் தொழிலாளிகள்கூட நெடுந்தொலைவுப் பேருந்துகளிலும் கட்டணம் செலுத்த ஒரு பகுதியை செலவழித்தனரே இப்படி வேண்டாத சலுகைகள், அனாவசிய திட்டங்கள் என்று வாரியிறைப்பார்களாம், குடும்பத்துக்கு மூன்றல்ல, முப்பது லட்சம் கூட கடன் சுமையை ஏற்றுவார்களாம் சொந்தப புகழ், சுய விளம்பரத்துக்கு நம் தலையில் மிளகாய் அரைக்கிறார்கள்
Rate this:
Cancel
சமநிலை மூர்த்தி இந்த கொரோனா மாதிரியான நெருக்கடி காலத்தில் மகளிர் இலவச பேருந்து பயண அனுமதி அவசியம் தானா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X