சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஆக 30, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தமிழக காங்., தலைவர் அழகிரி: மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பாராட்டுகிறேன். விவசாயிகளின் கஷ்டங்களை தெரிந்த முதல்வர் ஸ்டாலின், இந்த தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார்.'டவுட்' தனபாலு: சட்டசபையில் நேற்று முன்தினம் இப்படித் தான், 'ஓவராக' புகழ்ந்த எம்.எல்.ஏ.,வை முதல்வர் ஸ்டாலின் கண்டித்துள்ளார். அந்த வகையில், கூட்டணி
 'டவுட்' தனபாலு

தமிழக காங்., தலைவர் அழகிரி: மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பாராட்டுகிறேன். விவசாயிகளின் கஷ்டங்களை தெரிந்த முதல்வர் ஸ்டாலின், இந்த தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார்.
'டவுட்' தனபாலு: சட்டசபையில் நேற்று முன்தினம் இப்படித் தான், 'ஓவராக' புகழ்ந்த எம்.எல்.ஏ.,வை முதல்வர் ஸ்டாலின் கண்டித்துள்ளார். அந்த வகையில், கூட்டணி கட்சித் தலைவர்களையும் அவர் கண்டித்து, 'ஓவராக ஜால்ரா அடிக்காதீர்கள்; நேர்மையாக விமர்சியுங்கள்' என, சொன்னாலும் சொல்வாரோ என்ற, 'டவுட்' வருகிறது!

பத்திரிகை செய்தி: சட்டசபையில் தி.மு.க., - எம்.எல்.ஏ., அய்யப்பன், முதல்வரை புகழ்ந்து தள்ளிக் கொண்டு இருந்தார். இதனால், அதிருப்தி அடைந்த முதல்வர் ஸ்டாலின், ''மானிய கோரிக்கை விவாதம் குறித்து மட்டுமே பேச வேண்டும். நேற்றே இது குறித்து எச்சரித்துள்ளேன். மீறி பேசினால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்; முதல்வரை புகழ்வதை எம்.எல்.ஏ., நிறுத்தினார். ஆனால், அமைச்சர்கள் நாசர், அனிதா ராதாகிருஷ்ணன், பன்னீர்செல்வம் ஆகியோர் முதல்வரையும், அவரது மகன் உதயநிதியையும் புகழ்ந்தபடியே இருந்தனர்.

'டவுட்' தனபாலு: இப்படி மாறுபாடான செய்கைகளை பார்க்கையில், 'நான் அடிப்பது போல அடிப்பேன்; நீ அழுவது போல அழு' என சொல்வது போல இருக்கிறதே என, மக்கள், 'டவுட்' அடைகின்றனர். மேலும், இன்று புகழும் இவர்கள், நாளையே கட்சி மாறியதும் இகழ்வர் என்பதை முதல்வர் நன்கு அறிந்திருப்பாரா!

சினிமா தயாரிப்பாளர் கலைமகன் முபாரக்: இன்றைய சூழலில், படத்தின் மொத்த பட்ஜெட்டில், நடிகர் - நடிகையரின் சம்பளத்திலேயே பெரும் பகுதி போய் விடுகிறது. 'முழு சம்பளத்தையும் கொடுத்தால் தான், 'டப்பிங்'குக்கே பேச வருவோம்' என, நேற்று வந்த நடிகர் கூட சொல்வது வருத்தமளிக்கிறது. சில நடிகர்கள், தயாரிப்பாளர் நொடிந்து போகும் அளவுக்கு சம்பளத்தை பெறுகின்றனர்.

'டவுட்' தனபாலு: தமிழ் மற்றும் ஹிந்தி பட, நாயக நடிகர் - நடிகையர் வாங்கும் சம்பளம், 'மைக்ரோசாப்ட்' உரிமையாளர் பில் கேட்ஸ் வருமானத்தை விட அதிகமாக இருக்கிறதே. சில நாட்கள், சில மணி நேர நடிப்புக்கு, 100, 200 என கோடிகளில் வாங்குகின்றனர். இதனால் தான் அந்த நடிகர்கள் கொழித்து கொண்டிருக்க, தயாரிப்பாளர்கள் பலர் நொடிந்து போயுள்ளனரோ என்ற, 'டவுட்' மக்களுக்கு வந்து விட்டது!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
30-ஆக-202115:23:02 IST Report Abuse
D.Ambujavalli எதிர்க்கட்சியினர் போற்றிப் புகழும் அளவு ஆட்சி செய்கிறேன் என்பதுபோல் புகழ்ச்சியை ருசிக்கலாம் மகனுக்கு அவரைப்போல் இரு மடங்கு மூத்தவர்கள் வணக்கம் வைக்கும் கொடுமையை ரசிக்கலாம் பின் எதற்காக 'சிலுப்பாத தயிரை, சலிப்போடு சாப்பிட்டாராம்' என்ற நாடகம்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X