சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மைனஸ் டிகிரி குளிரில் பெண் சித்ரவதை ராமநாதபுரம் பொறியாளர் மீது வழக்கு

Added : ஆக 30, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்--கூடுதல் வரதட்சணையாக ரூ.10 லட்சம் கேட்டு மனைவியை நெதர்லாந்து நாட்டில் மைனஸ் டிகிரி குளிரில் வீட்டிற்கு வெளியே நிற்க வைத்த பொறியாளர் உட்பட குடும்பத்தினர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.ராமநாதபுரம் காயக்காரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வினோதினி 25. எம்.எஸ்.சி., பட்டதாரியான இவருக்கும், சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் தையல்நாயகி தோட்டம் காளியம்மன்

ராமநாதபுரம்--கூடுதல் வரதட்சணையாக ரூ.10 லட்சம் கேட்டு மனைவியை நெதர்லாந்து நாட்டில் மைனஸ் டிகிரி குளிரில் வீட்டிற்கு வெளியே நிற்க வைத்த பொறியாளர் உட்பட குடும்பத்தினர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

ராமநாதபுரம் காயக்காரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வினோதினி 25. எம்.எஸ்.சி., பட்டதாரியான இவருக்கும், சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் தையல்நாயகி தோட்டம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த லோகநாதன் மகன் சுப்பையா என்ற சுரேஷ் 29,க்கும் 2020 ஏப்.24ல் திருமணம் நடந்தது. சாப்ட்வேர் இன்ஜினியான சுரேஷ் நெதர்லாந்து நாட்டில் வேலை செய்தார்.திருமணத்தின் போது 60 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம், ரூ.5 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் கொடுத்துள்ளனர். திருமணத்திற்கு பின் வினோதினியை நெதர்லாந்து அழைத்து சென்றார். அங்கு ரூ.10 லட்சம் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியுள்ளார்.

மைனஸ் டிகிரிக்கும் கீழ் உறை பனியில் வீட்டிற்கு வெளியே நிற்க வைத்து கொடுமை செய்துள்ளார். கர்ப்பமான நிலையில், வினோதினி நான்கு மாதங்களுக்கு முன் வளைகாப்பிற்காக ராமநாதபுரம் தாய் வீட்டிற்கு வந்தார். தற்போது ஒன்றரை மாத பெண் குழந்தை உள்ளது.நெதர்லாந்தில் இருந்து சுரேஷ் திருப்புத்துார் வந்த நிலையில், தொடர்ந்து ரூ.10 லட்சம் கேட்டு வினோதினியை கத்தியை காட்டி மிரட்டியும், அடித்தும் துன்புறுத்தி வந்தார்.

மாமனார் லோகநாதன், மாமியார் தெய்வநாயகி, சகோதரர் அருண்குமார் ஆகியோரும் உடந்தையாக இருப்பதாக ராமநாதபுரம் மகளிர் போலீசில் வினோதினி புகார் செய்தார். எஸ்.ஐ., ஹெலன் நான்கு பேர் மீதும் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X