சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவி பலாத்காரம் தாய், கள்ளக்காதலன் கைது

Added : ஆக 30, 2021
Share
Advertisement
திண்டுக்கல்-வடமதுரையில் 10ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில், தாயின் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார். மிரட்டிய தாயும் சிக்கினார்.திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையைச் சேர்ந்தவர் சிவகுமார், 35. இவரும், திண்டுக்கல்லைச் சேர்ந்த கணவரை பிரிந்து வாழும் 45 வயது பெண்ணும் வேடசந்துாரில் தனியார் நுாற்பாலையில் பணி செய்கின்றனர். இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.அந்த

திண்டுக்கல்-வடமதுரையில் 10ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில், தாயின் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.

மிரட்டிய தாயும் சிக்கினார்.திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையைச் சேர்ந்தவர் சிவகுமார், 35. இவரும், திண்டுக்கல்லைச் சேர்ந்த கணவரை பிரிந்து வாழும் 45 வயது பெண்ணும் வேடசந்துாரில் தனியார் நுாற்பாலையில் பணி செய்கின்றனர். இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.அந்த பெண்ணின் இரண்டாவது மகள் 10ம் வகுப்பு படிக்கிறார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மாணவியை, மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறிய சிவகுமார், வடமதுரை வீட்டில் வைத்து பலாத்காரம் செய்தார்.

இது பற்றி மாணவி, தாயிடம் கூறியபோது, 'நடந்ததை வெளியே சொல்லக் கூடாது' என மிரட்டினார். மாணவி, உறவினர்களிடம் கூறவே, வடமதுரை போலீசில் புகார் செய்யப்பட்டது. சிவகுமார், மாணவியின் தாய் ஆகியோரை 'போக்சோ'வில் போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X