பொது செய்தி

தமிழ்நாடு

வளர்ச்சி திட்டத்திற்கு கிராமங்கள் தேர்வு

Added : ஆக 30, 2021
Share
Advertisement
திருப்புல்லாணி : வேளாண் உழவர் நலத்துறையின் சார்பில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வட்டாரத்திலிருந்தும் 7 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு அதில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.திருப்புல்லாணி வட்டாரத்தில் காஞ்சிரங்குடி, பெரியபட்டினம், வேளானுார், குளபதம், ஆலங்குளம், எக்ககுடி, லாந்தை ஊராட்சிகள், உச்சிப்புளி

திருப்புல்லாணி : வேளாண் உழவர் நலத்துறையின் சார்பில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வட்டாரத்திலிருந்தும் 7 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு அதில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.திருப்புல்லாணி வட்டாரத்தில் காஞ்சிரங்குடி, பெரியபட்டினம், வேளானுார், குளபதம், ஆலங்குளம், எக்ககுடி, லாந்தை ஊராட்சிகள், உச்சிப்புளி வட்டாரத்தில் குயவன்குடி, நொச்சியூரணி, என்மனம் கொண்டான், கும்பரம், தேர்போகி, புதுமடம் ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவர்களுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்பட்டு திட்டத்தின் பயன் குறித்து விளக்கப்பட்டது. உதவி இயக்குனர் அமர்லால் தலைமை வகித்தார். உதவி வேளாண் அலுவலர்கள், ஊராட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X