பொது செய்தி

தமிழ்நாடு

காட்டு பன்றி வேட்டை இருவர் கைது

Added : ஆக 30, 2021
Share
Advertisement
ராஜபாளையம் : ராஜபாளையம் அருகே சேத்துார் வனப்பகுதிமேற்கு தொடர்ச்சிமலை, மேகமலை புலிகள் வனச்சரணாலய பகுதிக்குள்காட்டுப்பன்றி வேட்டையாடிய இருவரை கைது செய்து 10 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர்.ராஜபாளையம் வனச்சரகர் சக்தி பிரகாஷ் கதிர்காமன், வனவர் குருசாமி தலைமையிலான வனத்துறை குழுவினர் புல்பத்தி காடு எல்லையான தொட்டச்சியம்மன் கோயில் பகுதியில் ரோந்து

ராஜபாளையம் : ராஜபாளையம் அருகே சேத்துார் வனப்பகுதிமேற்கு தொடர்ச்சிமலை, மேகமலை புலிகள் வனச்சரணாலய பகுதிக்குள்காட்டுப்பன்றி வேட்டையாடிய இருவரை கைது செய்து 10 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர்.

ராஜபாளையம் வனச்சரகர் சக்தி பிரகாஷ் கதிர்காமன், வனவர் குருசாமி தலைமையிலான வனத்துறை குழுவினர் புல்பத்தி காடு எல்லையான தொட்டச்சியம்மன் கோயில் பகுதியில் ரோந்து மேற்கொண்டனர்.அப்போது வனப்பகுதியில் நான்கு பேர் கொண்ட கும்பல் காட்டுப்பன்றியை வேட்டையாடி பங்கு பிரித்து கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இருவர் தப்பி ஓடிய நிலையில் மற்ற இருவரை பிடித்து விசாரித்ததில் கணபதி சுந்தரநாச்சியார்புரத்தை சேர்ந்த ராம அழகு 43, பிள்ளையார் சாமி 31, என தெரிந்தது.வேட்டையாடி வைத்திருந்த 9 கிலோ காட்டு பன்றி இறைச்சி, 10 நாட்டு வெடிகுண்டுகள், அரிவாள், எடைக்கல், டூவீலர் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். தலைமறைவான சுந்தர்ராஜபுரத்தை சேர்ந்த ஆசைக்கனி 28, காளிராஜ் 21, இருவரையும் தேடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X