பொது செய்தி

தமிழ்நாடு

பரமக்குடி எஸ்.எஸ்.கோயில் தெருவில் நெரிசல்.

Added : ஆக 30, 2021
Share
Advertisement
பரமக்குடி : பரமக்குடி - எஸ்.எஸ். கோயில் தெரு, எமனேஸ்வரம் - நயினார்கோவில் ரோட்டை இணைக்கும் வகையில் வைகை ஆற்றில் தரைப்பாலம் உள்ளது. 20 ஆண்டுக்கு முன்பு ரோடு அமைத்தபோது வாகனங்கள் அதிகம் கிடையாது.தற்போது ஆற்றின் இரு புறங்களிலும் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டு, தரைப்பாலம் பகுதியை இணைக்கிறது. இதனால் பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் சந்தைக்கடை சந்திப்பில் நுழைந்து எஸ். எஸ். கோயில் தெரு
 பரமக்குடி எஸ்.எஸ்.கோயில் தெருவில் நெரிசல்.

பரமக்குடி : பரமக்குடி - எஸ்.எஸ். கோயில் தெரு, எமனேஸ்வரம் - நயினார்கோவில் ரோட்டை இணைக்கும் வகையில் வைகை ஆற்றில் தரைப்பாலம் உள்ளது.

20 ஆண்டுக்கு முன்பு ரோடு அமைத்தபோது வாகனங்கள் அதிகம் கிடையாது.தற்போது ஆற்றின் இரு புறங்களிலும் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டு, தரைப்பாலம் பகுதியை இணைக்கிறது. இதனால் பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் சந்தைக்கடை சந்திப்பில் நுழைந்து எஸ். எஸ். கோயில் தெரு வழியாக, தரை பாலத்தை லாரி மற்றும் சரக்கு வாகனங்கள் கடக்கின்றன.இப்பகுதி குறுக்கு தெருக்களில் குடியிருப்புகள், தனியார் மருத்துவமனைகள், பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், திருமண மண்டபங்கள் உள்ளன.

இதனால் டூவீலர்கள், ஆட்டோக்கள் போக்குவரத்தும் அதிகம்.சரக்கு மற்றும் கனரகவாகனங்கள் பரமக்குடி ஆற்றுப்பாலம் வழியாக செல்ல முடியும். 3 கி.மீ., துாரம் சுற்றி செல்வதை தவிர்க்கும் வகையில், எஸ்.எஸ். கோயில் தெரு வழியாக சென்று நெரிசலை ஏற்படுத்துகின்றனர்.குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை 10 அடி மட்டுமே அகலம்கொண்ட தெருவில், நடக்க வழியின்றி விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.எனவே தெருவில் வாகனங்களை முறைப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X