பொது செய்தி

தமிழ்நாடு

தொற்று தடுப்பு விதிமீறல்: 18 கடைகளுக்கு அபராதம்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
கோவை:கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் நேற்று ஆய்வு செய்தார்.மத்திய மண்டலத்தில் நஞ்சப்பா ரோடு, கிராஸ்கட் ரோடு, டாடாபாத் வீதிகளில் ஆய்வு மேற்கொண்ட கமிஷனர், தடையை மீறி திறக்கப்பட்டிருந்த கடைகளை மூட அறிவுறுத்தினார்.மேற்கு மண்டலத்தில் பூ மார்க்கெட்டில், சமூக இடைவெளி

கோவை:கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் நேற்று ஆய்வு செய்தார்.மத்திய மண்டலத்தில் நஞ்சப்பா ரோடு, கிராஸ்கட் ரோடு, டாடாபாத் வீதிகளில் ஆய்வு மேற்கொண்ட கமிஷனர், தடையை மீறி திறக்கப்பட்டிருந்த கடைகளை மூட அறிவுறுத்தினார்.மேற்கு மண்டலத்தில் பூ மார்க்கெட்டில், சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா, வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிந்திருக்கிறார்களா என ஆய்வு செய்தார்.டி.பி., ரோட்டில் கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றாமலும், முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளி பின்பற்றாமலும் செயல்பட்ட, 18 கடைகளுக்கு ரூ.18 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.அப்போது, உதவி கமிஷனர்கள் பார்வதி, சிவசுப்ரமணியன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X