பொது செய்தி

தமிழ்நாடு

வைகை அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
ஆண்டிபட்டி-வைகை அணை மற்றும் பூங்கா பகுதியில் 4 மாதத்திற்கு பின் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.தேனி மாவட்டத்தின் சுற்றுலா இடங்களில் வைகை அணை, பூங்கா முக்கிய இடமாக உள்ளது. பரந்து விரிந்த நீர் தேக்கப்பரப்பு, அணையின் வலது, இடது கரையில் உள்ள பல்வேறு பூங்காக்கள் சிறுவர் முதல் பெரியவர் வரையில் ஒருநாளை இனிமையாக போக்கும் இடமாக உள்ளது.கொரோனா கட்டுப்பாடுகளால் ஏப்.23ல்
 வைகை அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஆண்டிபட்டி-வைகை அணை மற்றும் பூங்கா பகுதியில் 4 மாதத்திற்கு பின் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.தேனி மாவட்டத்தின் சுற்றுலா இடங்களில் வைகை அணை, பூங்கா முக்கிய இடமாக உள்ளது.

பரந்து விரிந்த நீர் தேக்கப்பரப்பு, அணையின் வலது, இடது கரையில் உள்ள பல்வேறு பூங்காக்கள் சிறுவர் முதல் பெரியவர் வரையில் ஒருநாளை இனிமையாக போக்கும் இடமாக உள்ளது.கொரோனா கட்டுப்பாடுகளால் ஏப்.23ல் வைகை அணை பூங்கா மூடப்பட்டது. ஊரடங்கு தளர்வுகளுக்குப்பின் ஆக. 27 மாலையில் பூங்கா திறக்கப்பட்டது. வெளியூர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து சென்றனர்.

தற்போது அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளதால் வைகை அணை கீழ்பாலத்தில் நின்றபடி பலரும் 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர். நேற்று வெயில் இன்றி குளுமையாக இருந்த சீதோஷ்ண சூழல் சுற்றுலா பயணிகளுக்கு குதுாகலத்தை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X