சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

Added : ஆக 30, 2021
Share
Advertisement
திருக்கோவிலுார்-விழுப்புரம் அருகே, ஆற்றில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்.தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ், 17; பிளஸ் 2 மாணவர். இவரது உறவினர் அபினாஷ், 17; கல்லுாரி முதலாமாண்டு மாணவர்.இவர்களது குடும்பத்தினர், குலதெய்வ வழிபாட்டிற்காக, விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லுார் அடுத்த வீரமடை கிராமத்தில், பெண்ணை ஆற்றையொட்டி உள்ள அய்யனார் கோவிலுக்கு நேற்று

திருக்கோவிலுார்-விழுப்புரம் அருகே, ஆற்றில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்.தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ், 17; பிளஸ் 2 மாணவர். இவரது உறவினர் அபினாஷ், 17; கல்லுாரி முதலாமாண்டு மாணவர்.இவர்களது குடும்பத்தினர், குலதெய்வ வழிபாட்டிற்காக, விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லுார் அடுத்த வீரமடை கிராமத்தில், பெண்ணை ஆற்றையொட்டி உள்ள அய்யனார் கோவிலுக்கு நேற்று வந்தனர்.மதியம் 12:00 மணியளவில், குடும்பத்தினர் வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த நேரத்தில், ஆகாஷ், அபினாஷ் இருவரும் கோவிலுக்கு அருகே உள்ள பெண்ணையாற்றில் குளித்தனர். சிறிது நேரத்தில், ஆழமான சுழலில் சிக்கி, இருவரும் உயிருக்கு போராடினர்.அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், சிறுவர்கள்இருவரையும் மீட்டு, திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பரிசோதித்த டாக்டர், இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X