பொது செய்தி

தமிழ்நாடு

இதற்கு ஓர் வழி காணுங்க குழாய்கள் உடைப்பால் வீணாகும் தாமிரபரணி குடிநீர்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
நரிக்குடி : மாவட்டத்தில் தாமிரபரணி குடிநீர் குழாய்கள் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி ஆறாக ஓடுகிறது. உடைந்த இடத்திலே அடிக்கடி உடைப்பு ஏற்படுவதற்கு நிரந்தர தீர்வு காண சீரமைத்த ஒப்பந்ததாரரிடமே பணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க தாமிரபரணி குடிநீர் திட்டத்தின் கீழ் ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை,

நரிக்குடி : மாவட்டத்தில் தாமிரபரணி குடிநீர் குழாய்கள் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி ஆறாக ஓடுகிறது. உடைந்த இடத்திலே அடிக்கடி உடைப்பு ஏற்படுவதற்கு நிரந்தர தீர்வு காண சீரமைத்த ஒப்பந்ததாரரிடமே பணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க தாமிரபரணி குடிநீர் திட்டத்தின் கீழ் ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, நரிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் வாரம் ஒருமுறை அல்லது இருமுறை என குடிநீர் சப்ளை செய்யப்படுவதால் குடிநீர் பிரச்சனை ஓரளவுக்கு இல்லாத நிலை உள்ளது. பல இடங்களில் குழாய்கள் வலுவிழந்து அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகிறது. இதை சரிசெய்ய நியமிக்கப்படும் ஒப்பந்ததாரர் தரம் குறைந்த குழாய்களை பொருத்தி ஒரு சில மாதங்களுக்கு மட்டுமே தாக்குப் பிடிக்கும் அளவிற்கு வேலை செய்கின்றனர்.

இதற்காக பல லட்சங்களை குடிநீர் வடிகால் வாரியத்தினர் செலவு கணக்காக காட்டுகின்றனர். ஒரு சில மாதங்களில் மீண்டும் அதே இடத்தில் உடைப்பு ஏற்படுவது தொடர்கதையாக இருக்கிறது. இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளில் குடிநீர் வினியோகம் சீராக கிடைக்காமல் மக்கள் சிரமப்படுகின்றனர். சாக்கடை கழிவுநீரும் கலப்பதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடமே பணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.உறுதி தன்மை ஆய்வு வேண்டும்.உடைப்பு ஏற்பட்டு பராமரிக்க வேண்டிய இடத்தில் குடிநீர் வடிகால் வாரியத்தில் உள்ள தரக்கட்டுப்பாட்டு குழுவினர் குழாய்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

ஆய்வுகள் முறையாக நடக்காததால் அடிக்கடி அதே இடத்தில் உடைப்பு ஏற்படுகிறது. ஒரே இடத்தில் உடைப்பு ஏற்பட்டால் ஒப்பந்ததாரரிடமே பணம் வசூலிக்க வேண்டும்.கார்த்திக், ஹோட்டல் உரிமையாளர், நரிக்குடி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X