பொது செய்தி

தமிழ்நாடு

ஒற்றை பனை மரம்: விரைவில் வெட்டப்படும்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
கோவை,:உக்கடம் மேம்பாலப் பணிக்காக, கரும்புக்கடை திருப்பத்தில் உள்ள, ஒற்றை பனை மரம் வெட்டப்பட உள்ளது.உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை, மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலம் நோக்கிச் செல்லும்போது கரும்புக்கடை திருப்பத்தில், ஒற்றை பனை மரம் இருக்கிறது. பாலம் உயரத்துக்கு வளர்ந்துள்ள அம்மரத்தில், பனங்காய்கள் தொங்குகின்றன.தமிழக சட்டசபை
 ஒற்றை பனை மரம்: விரைவில் வெட்டப்படும்

கோவை,:உக்கடம் மேம்பாலப் பணிக்காக, கரும்புக்கடை திருப்பத்தில் உள்ள, ஒற்றை பனை மரம் வெட்டப்பட உள்ளது.உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை, மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலம் நோக்கிச் செல்லும்போது கரும்புக்கடை திருப்பத்தில், ஒற்றை பனை மரம் இருக்கிறது. பாலம் உயரத்துக்கு வளர்ந்துள்ள அம்மரத்தில், பனங்காய்கள் தொங்குகின்றன.தமிழக சட்டசபை கூட்டத்தில், முதன்முறையாக தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டில், பனை மரங்களை பாதுகாக்க, அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், பனை மரங்களை வெட்டக்கூடாது, வளர்ச்சி பணிகளுக்கு வெட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டால், கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.தற்போது, பாலத்துக்கான துாண்கள் கட்டப்படுகின்றன. ஓடுதளம் அமைக்கும்போது, மரத்தை வெட்ட வேண்டிய சூழல் ஏற்படும் என, நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X