சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக் மீது வேன் மோதி தம்பதி பலி

Added : ஆக 30, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கடலுார்-பைக் மீது வேன் மோதிய விபத்தில் கணவன், மனைவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். தம்பதியின் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.கடலுார் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த ஆண்டார்முள்ளிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம், 50; மனைவி ஆரியமாலா, 42. இருவரும் நேற்று 'பஜாஜ் சி.டி.100' பைக்கில், கடலுார் குடிகாடு சென்று, வீட்டிற்கு திரும்பிக்
 பைக் மீது வேன் மோதி தம்பதி பலி

கடலுார்-பைக் மீது வேன் மோதிய விபத்தில் கணவன், மனைவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். தம்பதியின் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடலுார் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த ஆண்டார்முள்ளிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம், 50; மனைவி ஆரியமாலா, 42. இருவரும் நேற்று 'பஜாஜ் சி.டி.100' பைக்கில், கடலுார் குடிகாடு சென்று, வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டு ஐந்து கண் மதகு அருகே, மாலை 4:00 மணிக்கு, சிதம்பரத்தில் இருந்து கடலுார் சென்ற 'மகேந்திரா' வேன், முன் பக்க டயர் வெடித்து, பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜமாணிக்கம், ஆரியமாலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.தகவலறிந்த, ஆண்டார்முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், 4:10 மணிக்கு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.புதுச்சத்திரம் போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால், 4:20 மணிக்கு கைவிடப்பட்டது.மறியலால், கடலுாரில்இருந்து சிதம்பரம் செல்லும் சாலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
03-செப்-202102:22:51 IST Report Abuse
Bhaskaran ஆழ்ந்த அனுதாபங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X