சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'போக்சோ' வழக்கில் கைதான இளைஞர் மீது 'குண்டாஸ்'

Added : ஆக 30, 2021
Share
Advertisement
கோவை:போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர் மீது, குண்டர் சட்டம் பாய்ந்தது. கோவையை சேர்ந்த, 14 வயது சிறுமி ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். அவரது பெற்றோர் ஆன்லைன் வகுப்பிற்காக மொபைல்போன் வாங்கிக் கொடுத்திருந்தனர். அதன் மூலம், கோவை துடியலுார் குப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த விஷ்ணு, 24 உடன் பழக்கம் ஏற்பட்டது.சிறுமியின் வீட்டுக்கு சென்ற விஷ்ணு, அவரை பாலியல் பலாத்காரம்

கோவை:போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர் மீது, குண்டர் சட்டம் பாய்ந்தது. கோவையை சேர்ந்த, 14 வயது சிறுமி ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். அவரது பெற்றோர் ஆன்லைன் வகுப்பிற்காக மொபைல்போன் வாங்கிக் கொடுத்திருந்தனர். அதன் மூலம், கோவை துடியலுார் குப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த விஷ்ணு, 24 உடன் பழக்கம் ஏற்பட்டது.சிறுமியின் வீட்டுக்கு சென்ற விஷ்ணு, அவரை பாலியல் பலாத்காரம் செய்தார். கடந்த ஜூன் மாதம் சிறுமிக்கு, உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு சென்ற போது, சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.பெற்றோர் புகாரின் பேரில், பேரூர் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விஷ்ணுவை சிறையில் அடைத்தனர். இந்நிலையில், விஷ்ணுவை போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்க, மாவட்ட எஸ்.பி.,செல்வநாகரத்தினம், மாவட்ட கலெக்டருக்கு கடிதம் அனுப்பினார்.இதையடுத்து, கலெக்டர் சமீரன், விஷ்ணுவை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள விஷ்ணுவிடம், அதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X