சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவர் உட்பட 2 பேர் கொலை

Added : ஆக 30, 2021
Share
Advertisement
திருநெல்வேலி,--திருநெல்வேலி, துாத்துக்குடியில் முன்விரோதத்தில் கல்லுாரி மாணவர் உட்பட இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அருகே கூத்தங்குழி கடற்கரை கிராமத்தில் கீழத்தெரு, மேலத்தெரு மக்களுக்கு அடிக்கடி மோதல் ஏற்படும்.இந்நிலையில், பாலிடெக்னிக் மாணவரான கீழத்தெரு அபினேஷ், 20, நேற்று முன்தினம் இரவில் வெட்டிக் கொலை

திருநெல்வேலி,--திருநெல்வேலி, துாத்துக்குடியில் முன்விரோதத்தில் கல்லுாரி மாணவர் உட்பட இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அருகே கூத்தங்குழி கடற்கரை கிராமத்தில் கீழத்தெரு, மேலத்தெரு மக்களுக்கு அடிக்கடி மோதல் ஏற்படும்.இந்நிலையில், பாலிடெக்னிக் மாணவரான கீழத்தெரு அபினேஷ், 20, நேற்று முன்தினம் இரவில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.கூடங்குளம் போலீசார், ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்து தேடுகின்றனர்.lதுாத்துக்குடி தெர்மல் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ், 20. சில தினங்களுக்கு முன், திருமண மண்டபத்தில் குடிபோதையில் சிலர் நடனமாடினர்.இதுபற்றி போலீசார் விசாரித்தனர்.

ரமேஷ் தான் புகார் கூறியிருக்கலாம் என அவரை கொலை செய்ய ஒரு கும்பல் திட்டமிட்டது.முருகேசன் நகரில், நண்பர் வீட்டு மாடியில் துாங்கிய ரமேஷை, அந்த கும்பல் நேற்று வெட்டி கொலை செய்தது. வடபாகம் போலீசார், ஏழு பேரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X