சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்னை ஆடிட்டர் கிருஷ்ணகிரியில் கொலை

Added : ஆக 30, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி-சென்னையைச் சேர்ந்த ஆடிட்டரை, கிருஷ்ணகிரியில் கொன்று புதைத்த சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.சென்னை, வேளச்சேரியை சேர்ந்தவர் ஆடிட்டர் ஜனரஞ்சன் பிரதான், 48; மனைவி பூர்ணிமா பிரதான், 38. ஆடிட்டர், தன்னுடன் பணிபுரியும் கிருஷ்ண குமார் என்பவருடன் கடந்த 26ல், சென்னையில் இருந்து வேலுார் வந்துள்ளார். இவர்களுடன் பணிபுரியும் சபரீஷ் என்பவர் மற்றொரு காரில்

கிருஷ்ணகிரி-சென்னையைச் சேர்ந்த ஆடிட்டரை, கிருஷ்ணகிரியில் கொன்று புதைத்த சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சென்னை, வேளச்சேரியை சேர்ந்தவர் ஆடிட்டர் ஜனரஞ்சன் பிரதான், 48; மனைவி பூர்ணிமா பிரதான், 38. ஆடிட்டர், தன்னுடன் பணிபுரியும் கிருஷ்ண குமார் என்பவருடன் கடந்த 26ல், சென்னையில் இருந்து வேலுார் வந்துள்ளார். இவர்களுடன் பணிபுரியும் சபரீஷ் என்பவர் மற்றொரு காரில் வந்துஉள்ளார்.இரவு, 10:00 மணியளவில், மனைவி பூர்ணிமாவுக்கு ஆடிட்டர் மொபைல் போனில் பேசியபோது, வேலுாருக்கு வந்த வேலை முடிந்து விட்டதாகவும், மறுநாள் கிருஷ்ணகிரியில் முக்கிய பணி இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மறுநாள் 27ல், மனைவி பூர்ணிமா போன் செய்தபோது, ஆடிட்டரின் போன் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. அவருடன் சென்ற கிருஷ்ணகுமார், சபரீஷ் ஆகியோருக்கு போன் செய்தபோது, அவர்கள் சரியான விபரத்தை கூறாததால், சந்தேகமடைந்த பூர்ணிமா 28ல், கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், கொடுக்கல், வாங்கல் தகராறில் ஆடிட்டர் அடித்து கொலை செய்யப்பட்டது தெரிந்தது. இது தொடர்பாக, கிருஷ்ண குமார், சபரீஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் கூறிய தகவலின்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி அடுத்த கோள்ளப்பட்டியில் உள்ள ஒரு மாந்தோப்பில், தாசில்தார் தெய்வநாயகி, போலீசார் முன்னிலையில், நேற்றிரவு ஆடிட்டர் ஜனரஞ்சன் பிரதான் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தில், திருமால், கோபி, சிவன், மணிவண்ணன் என மேலும் நால்வரை, கிருஷ்ணகிரி போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X