சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காரைக்குடியில் ரூ.5 கோடி பறிமுதல் ஹவாலா பணமா என விசாரணை

Added : ஆக 30, 2021
Share
Advertisement
காரைக்குடி--சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இரண்டு கார்களில் ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.5 கோடியை பறிமுதல் செய்த போலீசார் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.காரைக்குடி பேயன்பட்டி அருகே போலீசார் 2 கார்களை தடுத்து சோதனையிட்டனர். ரூ.5 கோடி இருப்பது தெரிந்தது. இதுதொடர்பாக சேலம் அம்மாபேட்டை ராஜ்குமார் 43, சென்னை சூரியகணேசன் 51, சேலம் பனமரத்துப்பட்டி

காரைக்குடி--சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இரண்டு கார்களில் ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.5 கோடியை பறிமுதல் செய்த போலீசார் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

காரைக்குடி பேயன்பட்டி அருகே போலீசார் 2 கார்களை தடுத்து சோதனையிட்டனர். ரூ.5 கோடி இருப்பது தெரிந்தது. இதுதொடர்பாக சேலம் அம்மாபேட்டை ராஜ்குமார் 43, சென்னை சூரியகணேசன் 51, சேலம் பனமரத்துப்பட்டி மணிகண்டன் 48, கோவை சண்முகஆனந்த் 46, குமார் 44, லால்குடி வழக்கறிஞர் காமராஜ் 40 ஆகியோரிடம் விசாரித்தனர்.ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பாக எடுத்து செல்வதாக கூறினர்.

உரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் 2 கார் பறிமுதல் செய்யப்பட்டது.டி.எஸ்.பி. வினோஜி உத்தரவில் ரூ.5 கோடி வருமான வரித்துறை அதிகாரி மகேஸ்வரியிடம் ஒப்படைக்கப்பட்டது. இது ஹவாலா பணமா எனவும் விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X