பொது செய்தி

தமிழ்நாடு

அவிநாசி ரோடு மேம்பால பணி :சிக்னல்களை அகற்ற முடிவு

Added : ஆக 30, 2021
Share
Advertisement
கோவை:அவிநாசி ரோடு மேம்பால பணிகள் நடந்து வருவதால், 15 இடங்களிலுள்ள போக்குவரத்து சிக்னல்களை தற்காலிமாக அகற்ற, முடிவு செய்யப்பட்டுள்ளது.கோவை அவிநாசி ரோட்டில், கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை, மேம்பால கட்டுமான பணி நடந்து வருகிறது. தற்போது பில்லர் அமைக்கும் பணிகள், நடந்து வருகின்றன. விரைவில், மேம்பால கர்டர்கள் அமைக்கும் பணி துவங்க உள்ளது. இதன் காரணமாக, அவிநாசி

கோவை:அவிநாசி ரோடு மேம்பால பணிகள் நடந்து வருவதால், 15 இடங்களிலுள்ள போக்குவரத்து சிக்னல்களை தற்காலிமாக அகற்ற, முடிவு செய்யப்பட்டுள்ளது.கோவை அவிநாசி ரோட்டில், கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை, மேம்பால கட்டுமான பணி நடந்து வருகிறது. தற்போது பில்லர் அமைக்கும் பணிகள், நடந்து வருகின்றன. விரைவில், மேம்பால கர்டர்கள் அமைக்கும் பணி துவங்க உள்ளது. இதன் காரணமாக, அவிநாசி ரோட்டில், 15 இடங்களிலுள்ள போக்குவரத்து சிக்னல்களை அகற்ற, முடிவு செய்யப்பட்டுள்ளது.போக்குவரத்து போலீசார் கூறுகையில், 'அவிநாசி ரோட்டில் மேம்பால கட்டுமான பணி நடக்கும், 10.10 கி.மீ., துாரத்தில் இருக்கும், 15 சிக்னல்கள் அகற்றப்பட உள்ளன. முதற்கட்டமாக, விமானநிலைய சந்திப்பு அருகே உள்ள சிக்னல் அகற்றப்பட்டது. வாகன நெரிசலை கட்டுப்படுத்த, அங்கு தற்காலிக சிக்னல் அமைத்து, போக்குவரத்து போலீசார் வாகன நெரிசலை சீர் செய்து வருகின்றனர்.பில்லர் அமைக்கும் பணி நடக்கும் இடங்களில் மட்டும், சிக்னல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மற்ற பகுதிகளில் சிக்னல்கள் முறையாக இயங்கி வருகிறது. அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களும் இயங்கி வருகின்றன.பில்லர் அமைக்கும் போது, தேவைப்படும் இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் அகற்றப்பட்டு, தற்காலிக சிக்னல் அமைத்து, வாகன நெரிசலை சரிசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X