சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏல நகைகள் வாங்கி தருவதாக பணமோசடி; இளைஞர் கைது

Added : ஆக 30, 2021
Share
Advertisement
காரைக்குடி--சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஏல நகைகளை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக பணமோசடியில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.காரைக்குடி கழனிவாசல் சங்கர் 34. இவர் ஏல நகைகளை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக பணம் நகை மோசடி செய்ததாக புகார் எழுந்தது.இதுதொடர்பாக கணேசன் என்பவர் காரைக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றத்தில்

காரைக்குடி--சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஏல நகைகளை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக பணமோசடியில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்குடி கழனிவாசல் சங்கர் 34. இவர் ஏல நகைகளை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக பணம் நகை மோசடி செய்ததாக புகார் எழுந்தது.இதுதொடர்பாக கணேசன் என்பவர் காரைக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றத்தில் ஆஜராகாத சங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.வடக்கு காவல்நிலைய போலீசார் நேற்றுமுன்தினம் சங்கரை பிடித்தனர்.சங்கர் தன்னிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்ததாக காரைக்குடி சூடாமணிபுரம் ராஜசேகர் புகாரளித்தார். ராஜசேகர் புகாரில் காரைக்குடி வடக்கு காவல்நிலைய போலீசார் சங்கரை நேற்று கைது செய்தனர். சங்கர் மீது பலரும் புகார் அளித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X