தியாகதுருகம் அருகே விபத்து தாம்பரத்தை சேர்ந்த 6 பேர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தியாகதுருகம் அருகே விபத்து தாம்பரத்தை சேர்ந்த 6 பேர் பலி

Added : ஆக 30, 2021
Share
தியாகதுருகம்-தியாகதுருகம் புறவழிச்சாலை சந்திப்பில் கார் மீது அரசு பஸ் மோதியதில், ஆறு பேர் இறந்தனர்.சென்னை தாம்பரத்தைச் சேர்ந்தவர் எபினேசர் இமான், 38. இவர், தன் குடும்பத்தினருடன் 'மஹிந்திரா' எஸ்.யூ.வி., காரில், ஊட்டிக்கு சென்று விட்டு நேற்று ஊர் திரும்பினார்.சென்னையில் இருந்து சேலம் நோக்கி, 35 பயணிகளுடன் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் அழகுராஜன், 40,
 தியாகதுருகம் அருகே விபத்து தாம்பரத்தை சேர்ந்த 6 பேர் பலி

தியாகதுருகம்-தியாகதுருகம் புறவழிச்சாலை சந்திப்பில் கார் மீது அரசு பஸ் மோதியதில், ஆறு பேர் இறந்தனர்.

சென்னை தாம்பரத்தைச் சேர்ந்தவர் எபினேசர் இமான், 38. இவர், தன் குடும்பத்தினருடன் 'மஹிந்திரா' எஸ்.யூ.வி., காரில், ஊட்டிக்கு சென்று விட்டு நேற்று ஊர் திரும்பினார்.சென்னையில் இருந்து சேலம் நோக்கி, 35 பயணிகளுடன் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் அழகுராஜன், 40, ஓட்டினார். இரவு, 8:00 மணியளவில் எபினேசர் இமான் வந்த கார், கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பிரிதிவிமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே புறவழிச்சாலையில் நுழைய முயன்ற போது,

அழகுராஜன் ஓட்டி வந்த அரசு பஸ், கார் மீது நேருக்கு நேர் மோதியது.இதில், கார் முழுதும் பஸ்சின் அடிப்பகுதியில் சிக்கிக் கொண்டதில், நிலை தடுமாறி அருகில் உள்ள 10 அடி ஆழ பள்ளத்தில் இறங்கியது.காரில் பயணம் செய்த எபினேசர் இமான், இவான், ரபேக்கா, அவரது தாய் மற்றும் மகன் உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர். பஸ்சில் டிரைவர் அழகுராஜன் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X