பொது செய்தி

இந்தியா

புதிய கல்வி கொள்கை செயல்படுத்த பயிற்சி

Added : ஆக 30, 2021
Share
Advertisement
பெங்களூரு:'புதிய கல்வி கொள்கையை செயல்படுத்துவதற்காக, அனைத்து பல்கலைக்கழகம், கல்லுாரி பேராசிரியர்கள், அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்' என, கர்நாடக உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.தேசிய அளவில் முதன் முதலாக, நடப்பு கல்வியாண்டிலேயே, கர்நாடகாவில் புதிய தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்படுகிறது.ஆனால், புதிய திட்டத்தை செயல்படுத்துவதில் தெளிவான வழிகாட்டுதல்

பெங்களூரு:'புதிய கல்வி கொள்கையை செயல்படுத்துவதற்காக, அனைத்து பல்கலைக்கழகம், கல்லுாரி பேராசிரியர்கள், அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்' என, கர்நாடக உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
தேசிய அளவில் முதன் முதலாக, நடப்பு கல்வியாண்டிலேயே, கர்நாடகாவில் புதிய தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்படுகிறது.ஆனால், புதிய திட்டத்தை செயல்படுத்துவதில் தெளிவான வழிகாட்டுதல் இல்லை என, கல்லுாரி நிர்வாகங்கள் கூறுகின்றன.இதற்கிடையில், திட்டத்தை செயல்படுத்துவதற்கு அனைத்து பயிற்சிகளும் வழங்கப்படுமென, உயர்கல்வித்துறை உறுதி அளித்துள்ளது.

புதிய கல்வி கொள்கை செயல்படுத்துவது தொடர்பாக நடந்த கூட்டத்தில், உயர் கல்வித்துறை கமிஷனர் பிரதீப் கூறியதாவது:புதிய கல்விகொள்கை செயல்படுத்துவது தொடர்பாக பெங்களூரு வடக்கு பல்கலைகழகம்; தார்வாட், மங்களூரு, துமகூரு பல்கலைகழகழங்களில் பேராசிரியர்கள், கல்லுாரி நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சி பட்டறை நடத்தப்பட உள்ளது.

இதன் மூலம் பேராசிரியர்கள் மாணவர்களுக்கு வழிகாட்டலாம். கடந்தாண்டு புதிய கல்வி கொள்கையை செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நடப்பாண்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

உயர்கல்வித்துறை அமைச்சர் அஸ்வத் நாராயணன் கூறியதாவது:புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவதற்கு தயாராக இருந்ததால், நடப்பாண்டிலிருந்து பின்பற்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.புதிய கல்வி கொள்கைக்கான பாடத்திட்டங்கள் பழைய பாடத்திட்டத்தை விட, 10 சதவீதம் தான் மாறுபட்டிருக்கும்.இதனால் மாணவர்கள் எளிதில் பின்பற்ற முடியும். மாணவர்களுக்கு அந்தந்த பல்கலைக்கழகம், கல்லுாரிகளில் உதவி அலைபேசி எண்கள் வழங்கப்படும். அதன் மூலம் அவர்கள் ஆலோசனை பெறலாம்.

பாட அட்டவணை தயாரிக்கும் பணிகள் முடியும் நிலையில் உள்ளன.அக்டோபர் 1 முதல் கல்லுாரிகள் திறக்கும் போது அனைத்தும் செயல்படுத்தப்படும். பல்கலைகழக துணை வேந்தர்கள் முன்னிலை வகித்து, கல்லுாரி நிர்வாகங்களுக்கு வழிகாட்ட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X