ரேஷன் பொருள் வாங்க 4 கி.மீ., பயணம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் பொருள் வாங்க 4 கி.மீ., பயணம்

Added : ஆக 30, 2021
Share
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே ரேஷன் பொருட்கள் வாங்க கிராம மக்கள் 4 கி.மீ., நடந்தே சென்று வருகின்றனர்.இவ்வொன்றியத்தில்சதுர்வேதமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட சிலநீர்பட்டியில் 120க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு தனியாக ரேஷன் கடை இல்லை.பஸ் வசதியும் இல்லாதநிலையில் 4 கி.மீ.,துாரத்தில் சதுர்வேதமங்கலம் கிராமத்தில் உள்ள கடைக்கு நடந்தே சென்று பொருட்களை

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே ரேஷன் பொருட்கள் வாங்க கிராம மக்கள் 4 கி.மீ., நடந்தே சென்று வருகின்றனர்.

இவ்வொன்றியத்தில்சதுர்வேதமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட சிலநீர்பட்டியில் 120க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு தனியாக ரேஷன் கடை இல்லை.பஸ் வசதியும் இல்லாதநிலையில் 4 கி.மீ.,துாரத்தில் சதுர்வேதமங்கலம் கிராமத்தில் உள்ள கடைக்கு நடந்தே சென்று பொருட்களை வாங்கி வருகின்றனர்.

உமா சோணமுத்து, ஒன்றிய கவுன்சிலர்: இக்கிராமத்திற்கு தனியாக ரேஷன் கடை இல்லாததால் இப்பகுதி மக்கள் தங்களின் ஒரு நாள் பொழுதையும், கூலியையும் இழந்துதான் சதுர்வேதமங்கலம் கடைக்கு செல்லவேண்டியுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் ரேஷன் பொருட்களுக்காக நடந்து செல்லும்போது விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.பலமுறை புகார் அளித்தும்எந்த நடவடிக்கையும் இல்லை. இங்கு நிரந்தரரேஷன் கடையோ அல்லது நடமாடும் ரேஷன் கடையோ அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X