பொது செய்தி

தமிழ்நாடு

ஆத்துாரில் கூட்டுறவுத்துறை சார்பில் அரசு கலைக்கல்லுாரி அமையுமா

Added : ஆக 30, 2021
Share
Advertisement
ஆத்துார் : கூட்டுறவுத்துறை சார்பில் அரசு கலைக் கல்லுாரி செம்பட்டி ஆத்துாரில் அமையலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 தொகுதிகளில் ஆத்தூர், ஒட்டன்சத்திரம், நத்தம் தொகுகளில் மட்டும் அரசு கலைக் கல்லுாரிகள் இல்லை. சட்டசபை மானிய கோரிக்கையின் போது, கூட்டுறவுத் துறை சார்பில் ஆத்துார் தொகுதியில் ரூ. 20 கோடியில் கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என

ஆத்துார் : கூட்டுறவுத்துறை சார்பில் அரசு கலைக் கல்லுாரி செம்பட்டி ஆத்துாரில் அமையலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 தொகுதிகளில் ஆத்தூர், ஒட்டன்சத்திரம், நத்தம் தொகுகளில் மட்டும் அரசு கலைக் கல்லுாரிகள் இல்லை. சட்டசபை மானிய கோரிக்கையின் போது, கூட்டுறவுத் துறை சார்பில் ஆத்துார் தொகுதியில் ரூ. 20 கோடியில் கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆத்தூரில் தாலுகா அலுவலகம், தீயணைப்பு நிலையம், அரசு மருத்துவமனை, கோர்ட் செயல்பட்டு வருகின்றன. கல்லூரிக்கான இடம் தேர்வில், தங்கள் பகுதியில் வாய்ப்பு கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு தொகுதி மக்களிடையே பரவலாக நிலவுகிறது. ஆத்தூர் அருகே புதிய 4 வழிச்சாலை சந்திப்பு, செம்பட்டி அருகே புதுக்கோடாங்கிபட்டி பகுதிகளில் அரசு நிலம் உள்ளது. போக்குவரத்து வசதியும் இருப்பதால், இப்பகுதிகளில் ஏதேனும் ஒரு இடத்தில் கல்லூரி அமைய அதிக வாய்ப்புள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X