பொது செய்தி

தமிழ்நாடு

வாயில்லா ஜீவனை நேசிக்கும் இன்ஜி., பட்டதாரி காளைகளை கவர வெரைட்டி உணவகம்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
சிவகங்கை : வாயில்லா ஜீவன்களை பெரும்பாலும் கண்டு கொள்ள மாட்டோம். ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு காளைகள் நம் தமிழ் பாரம்பரியம் என்பதால் சிவகங்கை மாவட்ட வீரர்களுக்கு காளைகள் என்றால் அலாதி பிரியம் தான். மனிதன் அசைவ ஓட்டல்களில் வெரைட்டி உணவுகளை வாங்கி சாப்பிட்டு மகிழ்கின்றனர். ஆனால் காளைகள் அதன் உரிமையாளர்கள் வழங்கும் தீவனத்தை தான் உண்ண வேண்டும்.அந்த வகையில் வாயில்லா

சிவகங்கை : வாயில்லா ஜீவன்களை பெரும்பாலும் கண்டு கொள்ள மாட்டோம். ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு காளைகள் நம் தமிழ் பாரம்பரியம் என்பதால் சிவகங்கை மாவட்ட வீரர்களுக்கு காளைகள் என்றால் அலாதி பிரியம் தான்.

மனிதன் அசைவ ஓட்டல்களில் வெரைட்டி உணவுகளை வாங்கி சாப்பிட்டு மகிழ்கின்றனர். ஆனால் காளைகள் அதன் உரிமையாளர்கள் வழங்கும் தீவனத்தை தான் உண்ண வேண்டும்.அந்த வகையில் வாயில்லா ஜீவன்களான காளைகளுக்கும் வெரைட்டி உணவு' வழங்கும் நோக்கில், பிளாக் பார்ட்னர்' காளைகள் உணவகத்தை சிவகங்கை அருகே கட்டாணிபட்டியில் பொறியியல் பட்டதாரி ஜெகன் 23 துவக்கியுள்ளார்.காளைகளுக்கான தீவனம் டோர் டெலிவரி இவரது காளைகள் உணவகத்தில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு மஞ்சுவிரட்டிற்கு செல்லும் காளைகள் விரும்பி உண்ணும் உளுந்து, துவரை, பாசி பருப்பு துாசி, பிஸ்கட் மாவு, கோதுமை தவிடு, பருத்தி கொட்டை உள்ளிட்ட அதிக ஊட்டச்சத்துள்ள உணவு பொருட்களை விற்பனை செய்கிறார். அலைபேசி எண் 87547 34651 க்கு அழைத்தால் அனைத்து தீவனங்களும் டோர் டெலிவரி செய்யப்படும்.காளை வளர்க்க ஊக்குவிப்புபி.இ., பட்டதாரி ஜெகன் 23, கூறியதாவது: கோயம்புத்துார் தனியார் இன்ஜி., கல்லுாரியில் பி.இ., முடித்தேன். என் தந்தை விவசாயி. காளை வளர்ப்பில் ஆர்வம் அதிகம். என் வீட்டில் 2 காளைகள் வளர்க்கிறேன். வடமாடு, மஞ்சுவிரட்டில் பரிசுகளை அள்ளி வருகின்றன.

இவற்றிற்கு வெரைட்டியான உணவு வழங்கி வருகிறேன். என்னை போன்று மாவட்ட அளவில் ஏராளமானவர்கள் சிராவயல், கண்டுபட்டி, அரளிக்கோட்டை களத்தில் விளையாடும் காளைகள் 250 வரை வளர்க்கின்றனர்.இக்காளைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில் பிளாக் பார்ட்னர்' காளை உணவகம் துவக்கியுள்ளேன். 50 கிலோ எடை கொண்ட மூடைக்கு 1,050 முதல் ரூ.3000 வரை விலை.தினமும் வாங்கும் தீவன செலவை விட இது குறைவு தான். காளை வளர்ப்போருக்கு சிரமமின்றி விலை வைத்து தீவனம் விற்கிறேன். காளைகள் வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த உணவகத்தை துவக்கியுள்ளேன் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X