பொது செய்தி

இந்தியா

கேரளாவில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமலாகிறது

Updated : ஆக 30, 2021 | Added : ஆக 30, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
மூணாறு;கேரளாவில் நேற்று மாலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 1,51,670 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 29,836 பேருக்கு கொரோனா உறுதியானது.நோய் பாதிப்பு சதவீதம் 19.67 ஆக அதிகரித்தது.நேற்று 22,088 பேர் குணமடைந்தனர். கடந்த சில நாட்களில் 75 பேர் இறந்ததால் மொத்த பலி 20,541 ஆக அதிகரித்தது. மாவட்டம் வாரியாக திருச்சூர் 3965, கோழிகோடு 3548, மலப்புரம் 3190, எர்ணாகுளம் 3178, பாலக்காடு 2816, கொல்லம் 2266,

மூணாறு;கேரளாவில் நேற்று மாலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 1,51,670 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 29,836 பேருக்கு கொரோனா உறுதியானது.



latest tamil news


நோய் பாதிப்பு சதவீதம் 19.67 ஆக அதிகரித்தது.நேற்று 22,088 பேர் குணமடைந்தனர். கடந்த சில நாட்களில் 75 பேர் இறந்ததால் மொத்த பலி 20,541 ஆக அதிகரித்தது. மாவட்டம் வாரியாக திருச்சூர் 3965, கோழிகோடு 3548, மலப்புரம் 3190, எர்ணாகுளம் 3178, பாலக்காடு 2816, கொல்லம் 2266, திருவனந்தபுரம் 2150, கோட்டயம் 1830, கண்ணூர் 1753, ஆலப்புழா 1498, பத்தனம்திட்டா 1178, வயநாடு 1002, இடுக்கி 962, காசர்கோடு 500 பேர் பாதிக்கப்பட்டனர்.கடந்த இரண்டு நாட்களாக பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்த நிலையில் நேற்று பாதிப்பு சற்று குறைந்தது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில்கொரோனாவை கட்டுப்படுத்தஞாயிறு முழு ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்தது.இன்று முதல் இரவு ஊரடங்கு அமலாகிறது.மூணாறில் அலட்சியம்இடுக்கி மாவட்ட சுற்றுலா நகரான மூணாறில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை முறையாக பின்பற்றுவது இல்லை.தடுப்பூசி முகாம் உள்பட மக்கள் அதிகம்கூடும் இடங்களில் சமூக இடைவெளிஇல்லை. அதோடுசுற்றுலாஇடங்கள்திறக்கப்பட்டதால் நோய் பரவல் அதிகரிக்கும் அச்சம் உள்ளது.நேற்று முழு ஊரடங்கில் அத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்கப்பட்டன.


latest tamil news


இருப்பினும்வாகனங்கள் அதிகமாக இயங்கின.கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதில்மெத்தனபோக்கு காட்டும் அதிகாரிகளால் மூணாறில் நோய் பரவ முக்கிய காரணமாக அமையலாம்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JSS - Nassau,பெர்முடா
30-ஆக-202116:23:36 IST Report Abuse
JSS உபயோகமற்ற கேவலமான அரசு படித்த முட்டாள் மக்கள். இந்த இரண்டு காம்பினேஷனும் டெட்லி. கொரோன கேரளாவில் குடியிருக்க வந்துவிட்டது. பக்கத்துக்கு மாநில அரசுகளே உங்கள் எல்லையை சீல் வையுங்கள், இல்லையேல் உங்கள் மாநிலத்திலும் கொரோன கோலோச்சும்
Rate this:
Cancel
sathish - melbourne,ஆஸ்திரேலியா
30-ஆக-202113:28:18 IST Report Abuse
sathish எங்கு அறிவாளிகள் அதிகமோ அங்கேதான் முடிசூடா முட்டால் அரசன் இருப்பான் , அதே போல்தான் இந்த அரசும் ,,அய்யப்பன் விஷயத்திலும் இப்படித்தான் ,,கோளாறு ,,,அவர் சார்ந்த கட்சியும் சரி மக்களின் மீது கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் இது போல் ஆயிரக்கணக்கில் மனிதர்களை கொன்று குவிப்பதில் ஏதோ புரியாத ஒரு சந்தோசம்
Rate this:
Cancel
தமிழ் எனது உயிர் - Kabul,ஆப்கானிஸ்தான்
30-ஆக-202113:03:27 IST Report Abuse
தமிழ் எனது உயிர் நூறு சதவீதம் லிட்டரசி என்பது கேலிக்கூத்து
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X