பூங்கா அருகே இறைச்சி கடை இடம் மாற்ற கோரிக்கை| Dinamalar

பூங்கா அருகே இறைச்சி கடை இடம் மாற்ற கோரிக்கை

Added : ஆக 30, 2021
Share
பொதட்டூர்பேட்டை:காந்தி பூங்காவை ஒட்டி நடத்தப்படும் இறைச்சி கடையால், பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இடம் மாற்றம் செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதட்டூர்பேட்டை பேரூராட்சி மன்ற அலுவலகத்தை ஒட்டி அமைந்துள்ளது காந்தி பூங்கா. இந்த பூங்காவை, பேரூராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது.இந்நிலையில், பூங்காவை ஒட்டி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை
 பூங்கா அருகே இறைச்சி கடை இடம் மாற்ற கோரிக்கை

பொதட்டூர்பேட்டை:காந்தி பூங்காவை ஒட்டி நடத்தப்படும் இறைச்சி கடையால், பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இடம் மாற்றம் செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதட்டூர்பேட்டை பேரூராட்சி மன்ற அலுவலகத்தை ஒட்டி அமைந்துள்ளது காந்தி பூங்கா. இந்த பூங்காவை, பேரூராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது.இந்நிலையில், பூங்காவை ஒட்டி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில், இறைச்சி கடை நடத்தப்படுகிறது. பூங்காவுக்கு சுற்றுச்சுவர் இல்லாத நிலையில், பூங்காவை ஒட்டி, அத்திமாஞ்சேரிபேட்டை சாலையோரத்தில் நடத்தப்படும் இறைச்சி கடையால், பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

அதே போல், குறுகலான அத்திமாஞ்சேரிபேட்டை சாலையில் நடந்து செல்பவர்களும் அவதிப் படுகின்றனர்.இறைச்சி கடையை சந்தை வளாகம் அல்லது வேறு பகுதிக்கு இடம் மாற்றம் செய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X