பொது செய்தி

தமிழ்நாடு

கூடுதல் மகசூலுக்கு சான்று விதைகள்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
வடமதுரை : 'சான்று பெற்ற விதைகளை பயன்படுத்தி கூடுதல் மகசூல் பெறலாம்' என, வேளாண் அலுவலர் சுப்பையா தெரிவித்தார்.அவர் தெரிவித்தது: விதையே விளைச்சலுக்கு ஆதாரம். விதை மட்டுமே 60 சதவிகித மகசூலை நிர்ணயம் செய்கிறது. எனவே சான்று பெற்ற விதைகளை மட்டுமே விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்.சான்று பெற்ற விதைகள் அந்த ரகத்துக்குரிய பாரம்பரிய குணங்களையும், அதிகப்படியான முளைப்புத் திறன்,

வடமதுரை : 'சான்று பெற்ற விதைகளை பயன்படுத்தி கூடுதல் மகசூல் பெறலாம்' என, வேளாண் அலுவலர் சுப்பையா தெரிவித்தார்.

அவர் தெரிவித்தது: விதையே விளைச்சலுக்கு ஆதாரம். விதை மட்டுமே 60 சதவிகித மகசூலை நிர்ணயம் செய்கிறது. எனவே சான்று பெற்ற விதைகளை மட்டுமே விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்.சான்று பெற்ற விதைகள் அந்த ரகத்துக்குரிய பாரம்பரிய குணங்களையும், அதிகப்படியான முளைப்புத் திறன், விதையாக பயன்படுத்துவதற்குரிய அனுமதிக்கப்பட்ட ஈரப்பதம் கொண்டதாக இருக்கும்.மேலும் விதையின் தரத்துக்கு தேவையான இன மற்றும் புறத்தூய்மை உடையதாக இருக்கும்.

பிற ரக விதைகள் மற்றும் களைகள் இல்லாமல் இருக்கும். இயந்திர நடவு, செம்மை நெல் சாகுபடி முறையில் சாகுபடி செய்யும்போது ஒன்று அல்லது 2 நாற்றுக்களை கொண்டு நடவு செய்ய எளிதாக இருக்கும். பயிர் வளர்ச்சி ஒருமித்திருக்கும். ஒரே நேரத்தில் முதிர்ச்சி அடைந்து கூடுதல் மகசூல் கிடைக்கும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X