பொது செய்தி

தமிழ்நாடு

அரசு நிதி ஒதுக்காததால் கிடப்பில் போரூர் ஏரி உபரி நீர் கால்வாய் அமைக்கும் பணி

Added : ஆக 30, 2021
Share
Advertisement
போரூர் : போரூர் ஏரி உபரி நீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு, அரசு நிதி ஒதுக்காததால் ஆறு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில், சட்டசபையில் இது குறித்து பேசியவர், அமைச்சர் பொறுப்பேற்ற பின், கண்டு கொள்ளாமல் இருப்பதாக மக்கள் குற்றஞ்சாட்டினர்.சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில், போரூர் ஏரியும் ஒன்று. இந்த ஏரிக்கு, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, 12 கி.மீ.,

போரூர் : போரூர் ஏரி உபரி நீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு, அரசு நிதி ஒதுக்காததால் ஆறு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில், சட்டசபையில் இது குறித்து பேசியவர், அமைச்சர் பொறுப்பேற்ற பின், கண்டு கொள்ளாமல் இருப்பதாக மக்கள் குற்றஞ்சாட்டினர்.சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில், போரூர் ஏரியும் ஒன்று. இந்த ஏரிக்கு, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, 12 கி.மீ., துாரம் பயணிக்கும் தந்தி கால்வாய் வழியாக, நீர்வரத்து கிடைக்கும்.ஏரி நிரம்பி, கலங்கல் வழியாக வெளியேறும் உபரி நீர், மணப்பாக்கம் கால்வாய் வழியாக, அடையாறு ஆற்றுக்கு செல்லும்.

ஆனால், ஏரியில் இருந்த ஐந்து மதகுகள், ஒரு கலங்கல் ஆகியவை ஆக்கிரமிப்பால் மறைந்துள்ளன.இதனால், மழைக்காலத்தில் போரூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர், கால்வாய் இல்லாத காரணத்தால், சுற்றியுள்ள மதனந்தபுரம், கொளுத்துவாஞ்சேரி உள்ளிட்ட, 15 கிராமங்களில் புகுந்து, கடந்த காலங்களில் பெரும் சேதத்தை ஏற்படுகிறது.

முதற்கட்ட பணிஇதனால், மணப்பாக்கம் கால்வாய் வழியாக, அடையாற்றுக்கு உபரி நீரை பாயும் வகையில், 2009ல் போக்கு கால்வாய் கட்ட பொதுப்பணித்துறை தீர்மானித்தது. இதையடுத்து, மவுலிவாக்கம், தைலமரம் பகுதி அருகே, புதிய கலங்கல் கட்டப்பட்டது.

அந்த கலங்கலில் இருந்து மணப்பாக்கம் கால்வாய் சந்திப்பு வரை, 1.10 கி.மீ., துாரம் வரை, கோவூர்,- பரணிபுத்துார் அணுகுசாலையை ஒட்டி, 15 அடி அகலம், 7 அடி ஆழத்தில், கால்வாய் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, 45 கோடி ரூபாய் செலவில், 2013 -- 14ல் பணிகள் துவக்கப்பட்டன. மொத்தம், 80 சதவீதம் பணிகள் முடிந்தநிலையில், முறையான அனுமதி பெறவில்லை என, தேசிய நெடுஞ்சாலைத்துறை, 2015ல் வழக்கு தொடர, கால்வாய் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டது.


காத்திருப்பு

கடந்த, 2018ல் கால்வாய் அமைக்க தடையில்லா சான்று கிடைத்ததும், விடுபட்ட பணிக்கு, 20 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு தயாரித்து, அரசு அனுமதிக்கு அதிகாரிகள் அனுப்பினர்.ஆனால், இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால், 2015ல் கிடப்பில் போடப்பட்ட பணி, ஆறு ஆண்டுகளாக அரசால் கண்டுகொள்ளப்படாமல் உள்ளது.இது குறித்து, நம் நாளிதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறது. இருப்பினும், பிரச்னைக்கு தீர்வு எட்டப்படவில்லை.

இந்நிலையில், கால்வாய் பணிகள் முடியாமல் இருப்பதால், பருவ மழைக்காலத்தில் ஏற்படும் வெள்ளம், குடியிருப்பு பகுதிகளில் புகும் நிலை உள்ளது.மழை நீர் வடிகால் பணியால் சேதமடைந்த, கோவூர் -- பரணிபுத்துார் புறவழிச்சாலை, குண்டும் குழியுமாக மாறியுள்ளது. வடிகால் பணி கிடப்பில் போடப்பட்ட நாள் முதல் இன்று வரை, அச்சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

எம்.எல்.ஏ., டூ அமைச்சர்'போரூர் ஏரி உபரி நீர் கால்வாய் பணியை விரைந்து முடிக்க வேண்டும்' என, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், ஆலந்துார் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக இருந்த அன்பரசன், 2017ல் சட்டசபையில் பேசியிருந்தார். தற்போது, அவர் அமைச்சராக உள்ளார்.இருந்தாலும், உபரி நீர் கால்வாய் அமைக்கும் பணி குறித்து, அவர் எந்த முன்னேற்பாடு நடவடிக்கையும் எடுக்கவில்லை என, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X